பெங்களூருவில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக வக்பு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு ஈத்கா மைதான வழக்கில், விநாயகர் சதுர்த்தி விழாவை ஈத்கா மைதானத்தில் கொண்டாடக் கூடாது என உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
முன்னதாக, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, புதன் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்களுக்கு பெங்களூரு ஈத்கா மைதானத்தை விநாயகர் உற்சவத்தையொட்டி பயன்படுத்த கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் விநாயகர் சதுர்த்தி விழாவை ஈத்கா மைதானத்தில் கொண்டாடக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு துலியா ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, “நீதிபதிகள் இடையே கருத்து வேறுபாடு உள்ளது என்று கூறி மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கை அனுப்பியது. புதிய அமர்வில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஏ.எஸ் ஓகா மற்றும் எம்.எம் சுந்தரேஷ் ஆகியோர் இருந்தனர்.
இந்திய தலைமை நீதிபதி (சிஜேஐ) யு யு லலித் முன் இந்த விஷயத்தை குறிப்பிட இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு அனுமதி அளித்தது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு, ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஈத்கா இடம் விளையாட்டு மைதானமாகவும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தை அரசு அல்லது கொண்டாடவும் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று கூறியது. இஸ்லாமிய சமூகம் இரண்டு ஈத்களிலும் பிரார்த்தனை செய்யலாம், என்று கூறியது. இருப்பினும், ஒரு நாள் கழித்து, தனி நீதிபதி அமர்வு கூறியதை மேல்முறையீட்டில் அந்த உத்தரவை மாற்றி, அந்த இடம் குறித்து அரசாங்கம் முடிவெடுக்க அனுமதித்தது.
ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை அனுமதிக்கும் திட்டத்திற்கு எதிராக கர்நாடக மாநில வக்பு வாரியம் உச்சநீதிமன்றத்தை அணுகியது. வக்ஃப் வாரிய வழக்கறிஞரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், இந்த விஷயம் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாவிட்டால். தேவையற்ற பதட்டங்கள் உருவாக்கப்படும் என்று இந்திய தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன் தெரியப்படுத்தி, இந்த விவகாரத்தில் அவசர விசாரணையை கோரினார். இந்த நிலம் பல பத்தாண்டுகளாக முஸ்லிம்களின் பயன்பாட்டில் உள்ளது என்று கபில் சிபல் கூறினார்.
ஆகஸ்ட் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்திக்காக பெங்களூருவில் உள்ள சர்ச்சைக்குரிய ஈத்கா மைதானத்தில் ஒரு நாள் பந்தல் அமைக்க, எந்த இந்துத்துவா அல்லது உள்ளூர் குழுவும் அல்லாத, முஸ்ராய் துறையுடன் தொடர்புடைய கோயிலை கர்நாடக அரசு அனுமதிக்கலாம் என்று திங்கள்கிழமை வட்டாரங்கள் தெரிவித்தன.
2.5 ஏக்கர் இத்கா மைதானம் 1965 ஆம் ஆண்டு வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது அல்ல என்று ஆகஸ்ட் 6 ஆம் தேதி ப்ருஹத் பெங்களூரு மகாநகர் பாலிகே (பி.பி.எம்.பி) தீர்ப்பளித்ததால், அந்த நிலத்தின் மீது அரசுக்கு உரிமை வழங்கப்பட்டது. தெற்கு பெங்களூரு மைதானத்தில் விநாயகர் சிலையை நிறுவ வேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகளின் அழுத்தம் பாஜக அரசுக்கு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“