சமீபத்திய நாட்களாக மூன்லைட்டிங் குறித்தான விவாதம் என்பது பரவலாக இருந்து வருகின்றது. குறிப்பாக இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் இது குறித்து விவாதம் செய்து வருகின்றன.
இந்த மூன்லைட்டிங்கினால் என்ன பிரச்சனை? மூன்லைட்டிங் என்றால் என்ன? இது ஏன் இவ்வளவு பெரிய விவாதமாக மாறியுள்ளது. இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்ன? இது குறித்து நிபுணர்களின் கருத்து என்ன?
டெக் மகேந்திரா இது குறித்து என்ன கூறுகின்றது. மற்ற முன்னணி நிறுவனங்களின் கருத்து என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
ஐடி ஊழியர்களுக்கு இது எச்சரிக்கையா.. ஐடி துறையில் நடப்பது என்ன?
மூன்லைட்டிங் என்றால் என்ன?
பொதுவாக ஒரு நிறுவனத்தில் முதலாளிக்குத் தெரியாமல் பணிபுரியும் போது, மற்ற கூடுதல் பொறுப்புகள் மற்றும் மற்ற வேலைகளை மேற்கொள்வது மூன்லைட்டிங் என அழைக்கப்படுகிறது.
இது பொதுவாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றி கொண்டே மற்ற நிறுவனங்களில் பகுதி நேரமாகவோ அல்லது வார இறுதிகளில் பணியாளர்களால் செய்யப்படுகிறது. கூடுதல் வருமானத்திற்காக இதுபோன்ற செயல்கள் நடைபெறுகின்றது.
இது சரியானதா?
மூன்லைட்டிங் என்பதை சிலர் தவறானது என்று கூறுகின்றனர்.பலர் இது காலத்தின் தேவை என்று கூறுகின்றனர். சர்வதேச் அளவில் பணவீக்கம் என்பது அதிகரித்து வரும் நிலையில், மக்களின் செலவினங்கள் கூடிவிட்டன. ஆக மக்கள் தங்கள் தேவைக்காக இதுபோன்ற நடவடிக்கைக்களில் ஈடுபடுகின்றனர். பணிபுரியும் நிறுவனத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லாத வகையில் செயல்படும் வரை இதில் பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை என ஒரு தரப்பு கூறுகின்றது.
விப்ரோ & இன்ஃபோசிஸ் கருத்து
எனினும் விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி சமீபத்திய நாட்களுக்கு முன்பு, தொழில்நுட்பத் துறையில் மக்கள் மூன்லைட்டிங் ஈடுபடுவது ஒரு ஏமாற்று வேலை என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மோகன்தாஸ் பாய், இந்த விஷயத்தில் மூன்லைட்டிங் ஏமாற்றுதல் என்று கருதவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
ஊழியர்களின் விருப்பம்
மோகன்தாஸ் பாய் இது குறித்து, வேலைவாய்ப்பு என்பது ஒரு முதலாளிக்கும் பணியாளருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஆகும். அவர் பணி புரியும் நேரத்திற்கு ஏற்ப வேலை செய்வதற்காக முதலாளி சம்பளம் கொடுக்கிறார். அந்த நேரத்திற்குப் பிறகு பணியாளர் வேலை செய்வது அவரது சுதந்திரம் என்றும், வேலை நேரத்திற்கு பிறகு ஊழியர் அவர் விரும்பியதை செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
டிசிஎஸ்
டிசிஎஸ்-ன் தலைமை இயக்க அதிகாரி என் கணபதி சுப்பரமணியம் இது ஒரு நெறிமுறை சிக்கல் என்று கூறியுள்ளார்.
இதே டெக் மகேந்திராவின் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சிபி குர்னானி, மூன் லைட்டிங் பிரச்சனை பரவலாக இல்லை. தனது நிறுவனம் இது குறித்து ஒரு கொள்கையை உருவாக்கும் என்றும் கூறியுள்ளார்.மேலும் ஊழியர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுகு மேற்பட்ட வேலையினை தொடரலாம் என்றும் கூறியுள்ளார்.
வெளிப்படையாக இருங்கள்
குர்னானி தனது அறிக்கையில், நம்மில் பெரும்பாலனோர் திறன் மற்றும் உற்பத்தி திறனை இலக்காக கொண்டுள்ளோம். யாரேனும் விதிமுறைகளை பூர்த்தி செய்து, அதன் பிறகு சம்பாதிக்க நினைத்தால் அதனை செய்யலாம். அதனால் நிறுவனத்திற்கு எந்த பிரச்சனையும் ஏற்படாதவரை எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் அதனை செய்ய விரும்பினால் நிச்சயம் வெளிப்படையாக இருங்கள். எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் அதனை ஒரு கொள்கையாக மாற்ற போகிறேன்.
கவனத்தில் கொள்ளுங்கள்
குறுகிய கால ஆதாயங்களுக்காக நீங்கள் இதனை போன்று செய்தால், நிண்டகால லாபத்தினை இழக்க நேரிடும். அதனை ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று டிசிஎஸ் சுப்ரமணியம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது.
What is moonlighting? What does Tech Mahindra CEO Gurnani think about moonlighting?
What is moonlighting? What does Tech Mahindra CEO Gurnani think about moonlighting?/மூன் லைட்டிங் என்றால் என்ன.. இது சரியானதா.. டெக் மகேந்திரா அருமையான விளக்கம்!