கல்வித்துறை சார்ந்த திட்டங்களுக்கான தொடக்கவிழாவில் பங்கேற்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கு வர அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் “கல்விப் புரட்சியை நோக்கிய பயணத்தில் தமிழக மக்களுடன் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்” என டுவீட் செய்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் இன்று கல்வித்துறை சார்ந்த திட்டங்களுக்கான தொடக்கவிழாவில் பங்கேற்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் “புதுமை பெண்” எனும் பெயரில் செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. சென்னை பாரதி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர்
, அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். மேலும், 15 மாதிரி பள்ளிகள், 28 சீர்மிகு பள்ளிகளை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தொடங்கி வைக்க உள்ளார்.
இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் “ தமிழ்நாட்டிற்கு வர அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
“கல்விப் புரட்சியை நோக்கிய பயணத்தில் தமிழக மக்களுடன் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்”- என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவீட்டில் தெரிவித்துள்ளார்.
இதற்கு சில மாதங்களுக்கு முன்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது டெல்லி பயணத்தின் போது டெல்லி மாநிலத்தின் கல்வி திட்டங்கள் குறித்து டெல்லியில் உள்ள மாதிரி பள்ளிகளை ஆய்வு செய்தார். அப்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் உடனிருந்தார். அந்த பயணத்தின் தொடர்ச்சியாக இந்த திட்டம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.