சென்னை: மினர்வா பிக்சர்ஸ் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் மணிகாந்த் தல்லகுடி இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன், ஷரத்தா தாஸ், நந்தா, அஜய் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் அர்த்தம்.
ஷரத்தா தாஸ் இந்திய சினிமாவில் பிரபலமான நடிகை மட்டுமல்லாமல் மாடல் அழகியும் ஆவார். இவர் 400க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார். இவரது கவர்ச்சி போட்டோக்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
நமது பிலீம்பீட் சேனலுக்கு நடிகை ஷரத்தா தாஸ், மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.
மனநோய் மருத்துவர்
கேள்வி: ஷரத்தா தாஸ், அர்த்தம் படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது? பதில்: என்னுடைய தாய்மொழி பெங்காலி. ஆங்கிலம், மராத்தி ஆகிய மொழிகள் நன்கு தெரியும். தெலுங்கு 80 சதவீதம் தெரியும். கன்னடம், தமிழ் தெரியாது. தமிழ், தெலுங்கில் உருவாகும் படங்களில் நான் நடிக்கும் முதல் படம் இது. இந்த படத்தில் நான் நடிகர் நந்தாவுக்கு ஜோடியாக ஒரு மனநோய் மருத்துவராக நடித்துள்ளேன். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னை ஈ.சி.ஆர் சாலையில் தான் நடந்தது. சென்னையும், இங்கு வாழும் மக்களையும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நான் படித்த சைக்காலஜி மற்றும் ஜர்னலிசம் இப்படத்தில் நடிக்க ரொம்ப உதவியாக இருந்தது என்றார்.
இயல்பான குரல்
கேள்வி: போட்டோ ஷூட் மற்றும் திரைப்படங்களில் கவர்ச்சியாக வரும் நீங்கள் இந்த படத்தில் எப்படி வருகிறீர்கள்?
பதில்: படம் முழுவதும் நான் Black Shirt – Shorts காஸ்ட்யூம்மில் தான் வருவேன். படத்தில் நிறைய ஆக்ஷன் மற்றும் சேசிங் காட்சிகள் உள்ளன. அதற்கு இந்த காஸ்ட்யூம் பொருத்தமாக இருந்தது. படத்தில் பாடல் காட்களில் தேவையான இடங்களில் மட்டுமே கவர்ச்சியாக நடித்தேன். இந்த படத்தில் எனக்கு டப்பிங் கொடுத்துள்ள ஆர்ட்டிஸ்ட் ரொம்ப நல்ல செய்திருக்கிறார். அவரது இயல்பான குரல் எனக்கு பொருத்தமாக அமைந்திருந்தது.
முழு மனதோடு செய்வேன்
கேள்வி: உங்களுக்கு பிடிக்காதது என்ன?
பதில்: சிகரெட் பிடிப்பதும், சிகரெட் பிடிக்கிறவர்களையும் எனக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனால் சினிமாவில் அதை செய்ய வேண்டும் என்றால் தயங்க மாட்டேன். அது என்னுடைய கதாபாத்திரம் என்றால் அதை முழு மனதோடு செய்வேன் என்றார்.
முழுவதுமாக நம்பினார்
கேள்வி: மகேந்திரன், இயக்குநர் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: இயக்குநர் மாதிரி கதை சொல்ல முடியாது. ஒவ்வொரு காட்சிகளும் எந்த சூழ்நிலையில் வருகிறது என்று அழகாக சொல்லிக் கொடுப்பார். அவர் அவ்வாறு சொல்வதற்கு காரணம் என்னவென்றால், அவர் ஒரு தியேட்டர் ஆபரேட்டரின் மகன் என்பதால் தான். சின்ன வயதிலிருந்து சினிமாவை பார்த்து வளர்ந்தவர். கதையை கேட்டதுக்கு பின்னால், நடிகை ஷரதாவால் தூங்க கூட முடியவில்லை என்றார். நானும் ரொம்ப பாதிக்கப்பட்டேன். ஒரு இயக்குநர், நடிகர், நடிகர்களையும், டெக்னிஷியன்களையும் முழுவதுமாக நம்பினால் மட்டுமே படம் ஜெயிக்கும். இயக்குநர் எங்களை முழுவதுமாக நம்பினார் என்றார். ஷரத்தா தாஸ் நல்ல உடல்வாகு கொண்ட சிறந்த நடிகை. டயலாக் பேசும்போது ரொம்ப போல்டா இருக்கும். டயலாக் உச்சரிப்பும் ரொம்ப அருமையாக இருக்கும் என்று இயக்குநர் தன்னிடம் கூறியதாக மகேந்திரன் கூறியுள்ளார்.
நல்ல உழைப்பாளி
கேள்வி: ஷரத்தா தாஸ், மகேந்திரன் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: மகேந்திரன் ஒரு நல்ல உழைப்பாளி. படப்பிடிப்பு தொடர்ச்சியாக 20 முதல் 21 மணி வரை நடைபெற்றது. ஆனாலும் மகேந்திரன் ஆக்டிவ்வாக இருப்பார். அவரை பார்த்து தான், என்னை ஊக்கப்படுத்திக் கொண்டேன். யாரையும் எதிர்பார்க்காமல் சின்ன சின்ன வேலைகளை அவரே செய்து விடுவது சிறப்பு என்றார்.
கேமராமேன் பவன், படத்தில் சேசிங் காட்சிகள் அதிகமாக இருக்கின்ற காரணத்தில் ஈ.சி.ஆர். சாலையில் கேமராவை தூக்கி கொண்டு ஓடி வருவார். ஸ்பைடரை கூட தெளிவாக படம் பிடித்து இருப்பார். என்னையும் இந்த படத்தில் அழகாக காட்டியுள்ளார் என்றார்.
சிக்ஸர் அடிக்கணும்
கேள்வி: மாஸ்டர் மகேந்திரன் உங்களுடைய ஆசை…
பதில்: சேது கூறுவது போல், எந்த கிரவுண்ட்ல சிக்ஸர் அடிக்கிறோம் என்பது முக்கியமில்லை. வருகின்ற எல்லா பந்துகளிலும் சிக்ஸர் அடிக்க வேண்டும். அது தான் முக்கியம். அது மாதிரி தான் சின்ன படமோ, பெரிய படமோ என்றில்லாமல் அனைத்து படங்களிலும் நான் நன்றாக நடித்து வருகிறேன். மாஸ்டர் படத்திற்கு பிறகு , ஐந்து, ஆறு படங்களில் வித்தியாசமாக நடித்துள்ளேன் என்றார்.
த்ரில்லர் படம்
கேள்வி: மற்ற படங்களில் அர்த்தம் படம் எவ்வாறு வேறுபடுகிறது?
பதில்: அர்த்தம் படம் ஒரு த்ரில்லர் படம். இந்த படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு கதை இருக்கும். பொதுவாக சினிமாவில் 2.30 மணி நேரமும் ஒரு கதை தான் போகும். இந்த படத்தில் நிறைய கதைகள் இருக்கும் என்றார்.
இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=huvIWWwQQNY இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.