கடந்த இரண்டு ஆணடுகளில் குழந்தைகள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்


கோவிட் நோய்த்தொற்று தொடங்கி தற்போது வரை கடந்த இரண்டு ஆண்டுகளில், குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பல குழந்தைகள் எடை குறைந்த குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு றிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆணடுகளில் குழந்தைகள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Change Among Children In Last Two Years

பெற்றோருக்கு போதிய விழிப்புணர்வு இல்லை

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்து பெற்றோருக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.

மருத்துவமனைக்கு வந்த பெரும்பாலான குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற எடை இல்லை.

உயரத்திற்கு எடை இல்லை.

மருத்துவமனையில் சேர்க்கப்படும் இந்த குழந்தைகளுக்கு பொருளாதார நிலையோடு சரியான ஊட்டச்சத்து கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. கோவிட் நிலைமை குழந்தைகளின் ஊட்டச்சத்தையும் பாதித்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.