வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாக்தாத் : ஈராக்கில் ஷியா பிரிவினர் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.மேற்காசிய நாடான ஈராக்கில் கடந்த ஆண்டு அக்டோபரில் பொதுத் தேர்தல் நடந்தது. இதில், ஷியா பிரிவு தலைவர் முக்தாதா அல்- சதரின் கட்சி 73 இடங்களை கைப்பற்றியது.ஆனால், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், இப்போது வரை அங்கு புதிய அரசு அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக அல் சதர் அறிவித்தார். இதையடுத்து, அவருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். பாக்தாத் நகரில் துாதரகங்கள், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு கொண்ட இடத்தில் குவிந்த அல் சதர் ஆதவாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
சிறிய ரக ராக்கெட் வாயிலாக குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் நேற்று வரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். பதற்றம் நீடிப்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement