மும்பையில் பிரபலமான 14 அடி உயர லால்பாக்-சா-ராஜா விநாயகரை வழிபட திரண்ட பக்தர்கள்!

மும்பையில் லால்பாக்-சா-ராஜா என்று அழைக்கப்படும் 14 அடி உயர விநாயகர் சிலையை பக்தர்கள் வணங்க அனுமதிக்கப்பட்டதால் விநாயக சதுர்த்தி விழா மீண்டும் உற்சாகத்துடன் களை கட்டியுள்ளது.

2 ஆண்டுகள் கோவிட் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு மீண்டும் மும்பை நகர மக்கள் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுகின்றனர். வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வதுடன் இனிப்புகளையும் படையலிட்டு வருகின்றனர்.

மும்பையின் கணேஷ் மண்டல் லால்பாக்-சா-ராஜா பிரம்மாண்டமான விநாயகரை வழிபட ஏராளமானோர் வருகின்றனர். 1934 முதல் மிகப்பழைய கணபதி சிலையாகவும் மிகப் பிரம்மாண்டமான சிலையாகவும் இது விளங்குகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.