பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி சரமாரி கேள்வி!

பாஜக அண்ணாமலை கருத்து கந்தசாமி போல அனைத்திற்கும் கருத்து கூறும் நிலையில் கனியாமூர் மாணவி மரணத்திற்கு மட்டும் இது வரை ஏன் கருத்தோ அல்லது கண்டனமோ தெரிவிக்கவில்லை என கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.  இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி மிகக் கடுமையாக குறைந்திருப்பதாகவும், அதன் பொருள் இந்திய நாட்டின் பொருளாதாரம் மோடி ஆட்சியில் வீழ்ந்திருக்கிறது என கே.எஸ் அழகிரி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.  பாஜக சோதனை என்ற பெயரில் விசாரனை அமைப்புகளை ஏவல் நாய்கள் போல் அவிழ்த்து விடுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.  தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் செங்கம் குமார் தலைமையில் நடைபெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெறவுள்ள ஒற்றுமை பாதயாத்திரை குறித்து ஆலோசிக்கப்பட்டது, மேலும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.  இந்த மண்டல நிர்வாகிகளுக்ககான ஆலோசனைக் கூட்டத்தில் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டத்திலிருந்து ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.