வழக்கறிஞர்களுக்கு சமூக அக்கறை அவசியம்: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி!

வழக்கறிஞராக பனியாற்றி பணம் சம்பாதிப்பது முக்கியமல்ல, சமூகத்தில் மக்கள் மதிப்பும், சமூக அக்கறையும் கொண்டு இருக்க வேண்டும் நேர்மையும், கடின உழைப்பும் உங்கள் வளர்ச்சிக்கு மிகுந்த உறுதுணையாக இருக்குமென சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற வளாக கலை அரங்கத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக புதிதாக பதிவு செய்தவர்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

நேற்று, நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 800க்கும் மேற்பட்டவர்கள் புதிதாக வழக்கறிஞர்களுக்காக பதிவு செய்யப்பட்டவர்கள். பின்னர், புதிதாக வழக்கறிஞர்களாக பதிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீங்கள் எடுத்துக்கொண்ட உறுதி மொழியை வழக்கமான ஒன்றாக கருதாமல், முக்கியமானதாக கருதி பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். இது ஒரு சிறந்த துவக்கமாக உங்களுக்கு இருக்கும் என தெரிவித்த அவர் நீங்கள் இந்த துறைக்கு வருவதை வரவேற்கிறேன் என்றார்.

தற்போதய சூழலில் வழக்கறிஞர்கள், அரசியலிலும் ஈடுபட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் என்றார். நானும் உங்களை போன்று மாணவராக இருந்து வந்தவன் தான். இந்த துறையில் எந்த மாதிரியான அடிப்படை வேண்டுமென்ற தேவைகளை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் எவ்வாறு பயிற்சியை மேற்கொள்ளவது, எவ்வாறு வெற்றி பெறுவது என்பதை தெரிந்துகொள்ள மூத்த வழக்கறிஞர்களிடம் கற்று தெரிந்து கொள்ளுங்கள். நான் வழக்கறிஞராக இருந்த போது நாள் ஒன்றுக்கு 80-100 வழக்குகளை பார்த்து படித்து புரிந்து கொள்வேன் என்றார். அனைவரும் நீதிமன்றம் நேரம் முடிந்தாலும், நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை கேட்டு நம்மை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அனைவரும் சில வழிமுறைகளை பின்பற்றினால் திறமையாக செயல்படலாம்.

குறிப்பாக நேர்மையுடன் அதாவது உங்களை நாடி வரும் மனுதாரருக்கு நீங்கள் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்ள வேண்டும். குறுக்கு வழியில் செல்லாமல் நேர் வழியில் சென்றால் நன்மையை உண்டாக்கும். இல்லையெனில் உங்களுக்கு அது பெறும் துயரத்தை கொடுக்கும். குறுக்கு வழியில் செல்லாதீர்கள் என இளம் வழக்கறிஞர்களை கேட்டுக்கொண்டார்.

அடுத்ததாக, கடின உழைப்பு வேண்டும். நீங்கள் புத்தகத்தில் இருப்பதையும் தாண்டி புதிது புதிதாக கற்றுக்கொண்டு விரிவாக திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அது உங்கள் வளர்ச்சிக்கு உதவுமென்று கூறிய அவர் வழக்கில் உள்ள சட்ட நுணுக்கங்களை கற்று அதை எவ்வாறு எதிர்கொள்வது என கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் வழக்கறிஞராக நீதிமன்றம் சென்ற பின்பு உங்களுக்கு எந்த பிரிவில் (சிவில், கிரிமினல்) விருப்பம் உள்ளதோ அதை தேர்ந்தெடுத்து அதில் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் உங்கள் நேரத்தை வீனடிக்காமல் இருங்கள். நீதித்துறை சேவை என்பது சிறந்த ஒன்றாகும். நாம் வழக்கறிஞராக பனியாற்றி பணம் சம்பாதிப்பது முக்கியமல்ல, சமூகத்தில் மக்கள் மதிப்பும், சமூக அக்கறையும் கொண்டு இருக்க வேண்டும் என்பது சிறந்த ஒன்றாகும். எந்த வழியே தேர்ந்தெடுக்கிறோர்களோ அதற்கு இந்த பார் கவுன்சில் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் மட்டுமல்லாது அனைவரும் உறுதுணையாக இருப்பார்கள் என்று தெரிவித்தார்.

இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் புதிதாக பதிவு செய்த வழக்கறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் சுமார் 1லட்சத்து 60ஆயிரம் வழக்கறிஞர் பதிவு செய்துள்ளதில் 80 ஆயிரம் வழக்கறிஞர்கள் மட்டுமே முழு நேர வழக்கறிஞர்களாக செயல்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.