ஆசியக் கோப்பை டி20 போட்டியில் வங்கதேச அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்கள் வங்கதேசத்தை சுருட்டிவிட்டனர். ஆப்கன் அணியின் ரஷீத் கான் மற்றும் முஜீப் இணைந்து ஒவ்வொரு விக்கெட்டாக வீழ்ந்தனர். இதனால் 89 ரன்கள் எடுப்பதற்குள் வங்க தேசம் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
கடைசிநேரத்தில் ஆல் ரவுண்டர் மொசாடெக் ஹொசைன் 48 ரன்கள் சேர்க்க, வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் சேர்த்தது. ஆப்கன் தரப்பில் ரஷீத், முஜீப் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.
தொடர்ந்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின்னர் இப்ராஹிம் ஜாட்ரன், நஜிபுல்லா ஜாட்ரன் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். நஜிபுல்லா சிக்ஸர்களாக விளாசினார்.
17 பந்துகளை சந்தித்த நஜிபுல்லா 6 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உடன் 43 ரன்களும், இப்ராஹிம் 41 பந்துகளை சந்தித்து 42 ரன்களும் சேர்க்க 18.3 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்து ஆப்கன் அணி வெற்றிபெற்றது. இதன்மூலம் 2வது வெற்றிபெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
newstm.in