சுற்றுலா விசா:மலேசியாவில் தொழில் விசாவாக மாற்றுவதாக கூறி மோசடி

சுற்றுலா விசாவில் மலேசியா சென்று அந்த விசாவை அந்நாட்டில் தொழில் விசாவாக மாற்றுவதாக கூறி பண மோசடியில் ஈடுபடும் ஆட்கடத்தல் கும்பலை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அவ்வாறு சுற்றுலா விசாவை தொழில் விசாவாக மாற்றும் நடைமுறை இல்லை. இதனால் இவ்வாறான மோசடிக்காரர்களிடம் ஏமாற வேண்டாம் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாடு செல்வதற்கு முன்னர் தாம் தொடர்புகொள்ளும் வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

சுற்றுலா விசாக்களை முறைகேடாக மாற்றுவது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 2 இலட்ச ரூபா அபராதம் விதிக்கக்கூடிய குற்றமாகும்.

இவ்வாறான மோசடி தொடர்பான தகவல்களை 119, 118 அல்லது 1997 ஆகிய துரித தொலைபேசி இலக்கங்கள் மூலமாக தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு பொலிஸார்  அறிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.