`8 வருட சித்ரவதை; வாயால் சிறுநீரை சுத்தம் செய்யவைத்து கொடுமை!' – பாஜக பெண் பிரமுகர் கைது

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க நிர்வாகியாக இருப்பவர் சீமா பத்ரா. இவர் தனது வீட்டில் வேலை செய்யும் சுனிதா என்ற பெண்ணை வீட்டில் அடைத்துவைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேலைக்காரப் பெண் இது தொடர்பாக கொடுத்துள்ள வாக்குமூல வீடியோ சமூக வலைதளத்தில் பரவியுள்ளது. இதனால் பா.ஜ.க பிரமுகர் சீமா கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சீமா வேலைக்காரப் பெண்ணை அடிக்கடி அடித்து உதைத்ததோடு, இரும்பு கம்பியால் அடித்து பல்லை உடைத்துள்ளார். சூடான பாத்திரத்தால் அடித்ததில் சுனிதாவிற்கு உடல் முழுக்க காயம் ஏற்பட்டுள்ளது. தரையில் உள்ள சிறுநீரை வாயால் நக்கி சுத்தம் செய்யும்படி கூறி சீமா சித்ரவதை செய்ததோடு, சரியாக சாப்பாடும் கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வந்ததாக வேலைக்காரப் பெண் சுனிதா குற்றம்சாட்டியுள்ளார். கடந்த வாரம் ராஞ்சியில் சீமாவின் வீட்டிலிருந்து வேலைக்காரப் பெண்ணை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சீமா

இது தொடர்பான செய்தியை கேள்விப்பட்டு மாநில ஆளுநர் ரமேஷ் மாநில டி.ஜி.பி நீரஜ் சின்ஹாவை சந்தித்துப் பேசினார். வேலைக்கார பெண் மனிதாபிமானமற்ற வகையில் நடத்தப்பட்டது குறித்து ரமேஷ் டிஜிபியிடம் தனது கவலையை தெரிவித்தார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவியான சீமாமீது நடவடிக்கை எடுக்க தாமதமாவது குறித்து ஆளுநர் கவலை தெரிவித்தார். அதோடு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

கைது

இதையடுத்து போலீஸார் பா.ஜ.க பிரமுகர் சீமாவை கைதுசெய்துள்ளனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சீமா பா.ஜ.க-வின் பெண்கள் பிரிவு தேசிய செயற்குழுவில் உறுப்பினராக இருக்கிறார். அவர்மீது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். சீமா வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ஆதிவாசி சமுதாயத்தைச் சேர்ந்த சுனிதா வீட்டு வேலை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.