மதுரை: விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாகா கொண்டாப்பட்டு வருகியது. விநாயகர் சதுர்த்தி விழவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது மற்றும் வைக்கப்பட்ட சிலைகளை 2 நாட்கள் கழித்து நீர் நிலைகள் கரைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கோரி மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை நீதிபதி முரளி சங்கர் நேற்று மாலை வரை விசாரணை செய்தார். அதற்கான உத்தரவு தற்ப்போது பிறப்பிக்கப்பட்டது.
விநாயகர் சதூர்த்தி கொண்டாட அனுமதி கேட்ட அனைத்து மனுக்களும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவில் ஆடல் நிக்லஸிகளில் ஆபாச நடனங்களோ, அநாகரீகமான உரையாடல்களோ இடம் பெறக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் எந்த ஒரு அரசியல் கட்சி, சாதி, சங்கம் போன்றவற்றை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ அல்லது உரையாடல்களோ, அவர்களை விமர்சிக்கும் விதமான நடனங்களோ இடம் பெறக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதேபோல எந்த அரசியல் கட்சியை சார்ந்த தலைவர்களின் படங்களோ, அல்லது பிளக்ஸ் பேனர்களும் இருக்க கூடாது, இந்த விழாவானது என மதம் மற்றும் மத நல்லிணக்கத்தை பாதிக்காமல் இருக்க வேண்டும். மேலும் சாதி ரீதியான எந்த பாகுபாடும் இந்த விழாவில் காட்ட கூடாது.
இது மற்றுமின்றி இந்த விழாவில் கலந்துகொள்ள கூடியவர்கள் மது அருந்தல், குட்கா போன்ற போதை பொருட்களை பயன்படுத்த கூடாது போன்ற கடுமையான நிபந்தனைகளை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இருக்க கூடாது என நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.
இந்த நிபந்தனைகளை மீறி ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், வழக்கு தாக்கல் செய்தவர்களும், விழா ஏற்பாட்டாளர்களுமே பொறுப்பேற்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவில் நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் சுதந்திரமாக நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.