கோல்கட்டா : கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக குறைந்திருந்த வெளிநாட்டு ‘ஆர்டர்’கள் மீண்டும் அதிகரித்ததால் மேற்கு வங்கத்தின் துர்கா சிலை தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில், நவராத்திரியை முன்னிட்டு துர்கா பூஜை மிகச்சிறப்பாக கொண்டாடப்படும். மக்கள் வீடு மற்றும் பொது இடங்களில் பிரமாண்ட துர்கா சிலைகளை வைத்து வழிபடுவர். இம்மாநிலத்தில் துர்கா சிலை தயாரிப்பாளர்களும் ஏராளமாக இருக்கின்றனர். இவர்கள் துர்கா சிலைகளை மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு அனுப்புவதோடு, வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சிலைகளுக்கான ஆர்டர் வரவில்லை. ஆனால், இந்த ஆண்டு ஐரோப்பா, வட மற்றும் தென் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், உகாண்டா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவில் ஆர்டர்கள் வந்துள்ளன. இவற்றில் பல சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை செப்., இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும் சிலை தயாரிப்பாளர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement