கேரள மாணவர்கள் இருவர் பிரித்தானியாவில் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு: ஏராளமான தலைவர்கள் இரங்கல்…


பிரித்தானியாவில் ஏரி ஒன்றில் மூழ்கி கேரள மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளார்கள்.

உயிரிழந்த மாணவர்களுக்கு அயர்லாந்து பிரதமர் முதல் ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

பிரித்தானியாவில், கேரளப் பின்னணி கொண்ட மாணவர்கள் இருவர், ஏரி ஒன்றில் நீந்தச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 150 முதல் 200 குடும்பங்கள், வட அயர்லாந்திலுள்ள Derry என்ற இடத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த இடத்தைச் சேர்ந்த சில மாணவர்கள், திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில், Enagh Lough என்ற ஏரியில் நீந்தச் சென்றிருக்கிறார்கள். அப்போது அவர்களில் இரண்டு பேர் தண்ணீரில் மூழ்கியிருக்கிறார்கள்.

கேரள மாணவர்கள் இருவர் பிரித்தானியாவில் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு: ஏராளமான தலைவர்கள் இரங்கல்... | Death By Drowning In Britain

தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் 20 நிமிடங்களுக்குள் ஒரு மாணவரை மீட்டிருக்கிறார்கள். அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மற்றொரு மாணவரின் உடல் நள்ளிரவு வாக்கில்தான் மீட்கப்பட்டுள்ளது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

உயிரிழந்தவர்கள் Reuven Simon மற்றும் Joseph Sebastian ஆவர். இருவரும் 16 வயது மாணவர்கள்.

கேரள மாணவர்கள் இருவர் பிரித்தானியாவில் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு: ஏராளமான தலைவர்கள் இரங்கல்... | Death By Drowning In Britain

image -bbc

இந்த சம்பவம் அந்த நகர மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக அப்பகுதி பாதிரியாரான Fr Michael Canny தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு, அயர்லாந்து பிரதமரான Micheál Martin முதல் ஏராளமானோர் தங்கள் இரங்கலைத் தெரிவித்துவருகிறார்கள்.
 

கேரள மாணவர்கள் இருவர் பிரித்தானியாவில் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு: ஏராளமான தலைவர்கள் இரங்கல்... | Death By Drowning In Britain



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.