விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் விழா ஏற்பாட்டாளர்களே பொறுப்பு – உயர்நீதிமன்றம்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்கவும், விநாயகர் சிலை ஊர்வலத்திற்கும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனுக்களை விசாரித்த நீதிபதி முரளிசங்கர், ஊர்வலத்தில் ஆபாச நடனமோ பேச்சோ இருக்கக் கூடாது என்றும் அரசியல் கட்சி, மதம், சமூகம் சார்ந்த நடனம், பாடல்கள் இசைக்கக் கூடாது என்றும் மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் நிகழ்ச்சி இருக்கக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தார்.

ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் விழா ஏற்பாட்டாளர்கள், மனுதாரர்களே பொறுப்பு என்று தெரிவித்த நீதிபதி, இந்த நிபந்தனைகளுடன் உரிய அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.