Cobra Twitter Review: சியான் விக்ரமின் ஒன் மேன் ஷோ.. அஜய்ஞானமுத்து தரம் யா!

டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் அஜய் ஞானமுத்து, விக்ரம் நடிப்பில் கோப்ரா படத்தை இயக்கியுள்ளார். இதில், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கே.எஸ். ரவிகுமார், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி, மீனாட்சி உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பாக வெளியிடுகிறார். இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் 7 வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளார்.

கணித மேதையான விக்ரம், வித்தியாசமாக தொடர் கொலைகளை செய்கிறார். சிபிஐ அதிகாரியான இர்ஃபான் பதான் அவற்றை விசாரிக்க களமிறங்குகிறார். விக்ரம் யார், ஏன் தொடர் கொலைகள் செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், விக்ரம் நடித்த ‘கோப்ரா’ படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. அதிகாலையில் ஏராளமான ரசிகர்கள், படத்தை காண திரையரங்குகளில் குவிந்தனர். அத்துடன் இன்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதாலும் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில் கோப்ரா படம் பார்த்த சில ரசிகர்கள் படம் குறித்த தங்களது விமர்சனங்களை ட்வீட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

சியான் விக்ரம் ஒன் மேன் ஷோ.  அனைத்து கெட்அப்களிலும் அவரது நடிப்பு அருமை. நல்ல ஸ்கிரிப்ட் ஆனால் திரைக்கதை ஈர்க்கவில்லை, காதல் பகுதி பெரிய மைனஸ்.

டைட்டில் கார்டு மற்றும் அதீரா பாடலுடன் விக்ரமின் அறிமுகக் காட்சி மிகவும் பிரமாதம், கணிதத்தைப் பயன்படுத்தி கொலை என்பது சிறப்பானது, இந்த படத்தில் பல திருப்பங்கள் உள்ளன, குறிப்பாக இரண்டாம் பாதியில் விக்ரம் அல்டிமேட். ஒட்டுமொத்தமாக அற்புதமான திரைப்படம்.

கோப்ரா ஒரு சராசரி படம். ஸ்டோரி ப்ளாட் மோசமான பழைய டெம்ப்ளேட் அண்ணன் மற்றும் அம்மா செண்டிமேண்ட்!!! நேரம் அதிகம்… விக்ரம்காக நீங்கள் பார்க்கலாம்

ரோகினி சில்வர் ஸ்கீரினில் ரசிகர்களுடன் கோப்ரா முதல் காட்சி பார்த்த விக்ரம்

இந்த படத்தால் விஜய் ரசிகர்கள் கூட சித்ரவதைக்கு உள்ளாகியுள்ளனர் என ஒரு நெட்டிசன் ட்வீட்டரில் கூறியுள்ளார்.

சில சிறந்த  சரியான விவரங்களுக்கு #அஜய்ஞானமுத்துவை பாராட்ட வேண்டும். விக்ரமை அவர் காட்டிய விதம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது

கோப்ரா படம் முதல் பாதி, 2வது பாதி

சியான் நடிப்பு அசுரன். ஸ்ரீநிதி ஷெட்டி படம்  பார்க்க ஒரு முக்கிய காரணம். அருமையான படம் ஆனால் அஜய்ஞானமுத்து, முந்தைய படங்களின் அளவிற்கு இல்லை.

முதல் பாதி : நல்ல ஸ்கீன் பிரசன்ஸ் மற்றும் இடைவெளி ட்விஸ்ட் வேறலெவல்,

2வது பாதி : கொஞ்சம் மெதுவாக சென்றது ஆனால் நன்றாக உள்ளது. விக்ரம் நடிப்பு வேற லெவல்

கோப்ரா கண்டிப்பாக ஒரு பிளாக்பஸ்டர். சைக்காலஜிக்கல் த்ரில்லர் & வலுவான உணர்ச்சிகள் நிறைந்தது, விக்ரம் கேரியரில் சிறந்த திரைப்படங்களில் ஒன்று. அஜய்ஞானமுத்து தரம் யா, சங்கர் படம் பாத்த மாதிரி இருந்துச்சு. ஏஆர் ரஹ்மான்  திரைப்படத்தின் ஆன்மா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.