டாடா குழுமத்தில் பெரும் மாற்றம்.. சந்திரசேகரன் நிலை என்ன..?

டாடா சன்ஸ் தனது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (ஏஜிஎம்) செவ்வாயன்று அனைத்து தீர்மானங்களையும் ஒருமனதாக நிறைவேற்றியது.

இந்தப் புதிய முடிவுகள் மூலம் சந்திரசேகரன் டாடா சன்ஸ் நிறுவனத்தில் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும், டாடா டிராஸ்ட் நிர்வாகத்திற்குள் நுழைய முடியாத வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இது மட்டும் அல்லாமல் டாடா சன்ஸ் டாடா குழுமத்தின் நிர்வாகக் கட்டுப்பாடுகள் மட்டுமே என்றும், டாடா டிராஸ்ட்-க்கு தான் மொத்த பங்குதாரர்கள் அதிகாரம், பங்குகள் அதிகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா ஸ்டீல் எடுத்த திடீர் முடிவு.. இங்கிலாந்து என்ன முடிவெடுக்க போகிறது?

டாடா சன்ஸ் - டாடா டிரஸ்ட்

டாடா சன்ஸ் – டாடா டிரஸ்ட்

இதில் முக்கியமாக ஓரே நபர் குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் மற்றும் அதன் மிகப்பெரிய பங்குதாரர் நிறுவனமான டாடா டிரஸ்ட்-க்கும் தலைவராகவும் இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதன் ஒரு பகுதியாக அந்த அமைப்பின் ஆர்டிகிள் 118 இன் திருத்தம் செய்யப்பட உள்ளது.

டாடா சன்ஸ் தலைவர்

டாடா சன்ஸ் தலைவர்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக ஒருவரை நியமிப்பதற்கு 104பி பிரிவின்படி நியமிக்கப்பட்ட அனைத்து இயக்குநர்களின் உறுதியான வாக்கெடுப்பு அவசியம் என்றும், தற்போதைய தலைவரை நியமனம் மற்றும் நீக்குதல் ஆகிய இரண்டையும் பரிந்துரைக்க ஒரு தேர்வுக் குழு அமைக்கப்படும் என்றும் திருத்தப்பட்ட கட்டுரை குறிப்பிடுகிறது.

தேர்வுக் குழுவின் தலைவர்
 

தேர்வுக் குழுவின் தலைவர்

இந்தத் திருத்தத்தைத் தொடர்ந்து, தேர்வுக் குழுவின் தலைவரை சர் டோராப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் ஆகிய இரு டாடா குழும டிரஸ்ட்கள் தேர்வு செய்யும். சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் சர் ரத்தன் அறக்கட்டளை ஆகியவற்றால் தேர்வுக் குழுவின் கூட்டத்திற்கான உயர்மட்ட சிறிய குழு அமைக்கும், இதன் அடிப்படையில் தான் தலைவரை பரிந்துரைக்கப்படும்.

டாடா அறக்கட்டளைகள்

டாடா அறக்கட்டளைகள்

சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை அல்லது சர் ரத்தன் டாடா அறக்கட்டளை அல்லது இரண்டின் தலைவராக இருக்கும் ஒருவர் ஒரே நேரத்தில் டாடா சன்ஸ் தலைவராக இருக்கத் தகுதி பெறமாட்டார் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

 டாடா டிரஸ்ட்ஸ் ஆதிக்கம்

டாடா டிரஸ்ட்ஸ் ஆதிக்கம்

டாடா குழுமத்தில் இருக்கும் 100க்கும் அதிகமான நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய வர்த்தகத்தின் மொத்த ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் 66% பங்குகளை வைத்திருக்கும் டாடா டிரஸ்ட்ஸ் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த இத்தகைய முடிவுகளை எடுக்க உள்ளது.

சைரஸ் மிஸ்திரி

சைரஸ் மிஸ்திரி

இந்தப் புதிய மாற்றங்கள் மூலம் இனி டாடா குழுமத்தின் சைரஸ் மிஸ்திரி உருவாக்கிய பிரச்சனை போல் எதுவும் ஏற்படாது. இது பல தசாப்தங்களாக வர்த்தகத் துறையில் இருக்கும் டாடா குழுமம் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tata group made big wall between tata sons and tata trusts; N.Chandrasekaran will heads only one

Tata group made big wall between tata sons and tata trusts; N.Chandrasekaran will heads only one டாடா குழுமத்தில் பெரும் மாற்றம்.. சந்திரசேகரன் நிலை என்ன..?

Story first published: Wednesday, August 31, 2022, 13:23 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.