அமிர்தசரஸ்: சீக்கியர்கள் மற்றும் ஹிந்துக்கள் மோசடி செய்து மதமாற்றம் செய்யப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, பஞ்சாபின் டர்ன்டாரன் மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தில் இருந்த சிலைகள் சேதப்படுத்தப்பட்டதுடன், பாதிரியார் காரும் தீவைத்து எரிக்கப்பட்டது.
அகல் தக்த் ஜதேதர் என்ற சீக்கிய அமைப்பின் தலைவர் ஹர்பரீத் சிங் வெளியிட்ட அறிக்கையில், கிறிஸ்தவ மிஷனரிகள், சீக்கியர்களிடம் மோசடி செய்து மதமாற்றம் செய்து வருகின்றன. சீக்கியர்கள் மற்றும் ஹிந்துக்கள் ஏமாற்றப்பட்டு மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றன. அரசின் ஆதரவுடன் இது செயல்படுகிறது. ஓட்டு வங்கி அரசியல் காரணமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குகிறது எனக்கூறியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் டர்ன் டாரன் மாவட்டத்தில் உள்ள தகார்பூர் கிராமத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சிலைகளை அடித்து நொறுக்கியதுடன், அங்கு நின்று கொண்டிருந்த காருக்கும் தீவைத்தனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement