சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தனது 20வது கட்சி மாநாட்டை அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கும் என அரச ஊடகம் செவ்வாய்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாபெரும் கூட்டத்தில் அதிபர் ஜி ஜின்பிங் மீண்டும் பல தசாப்தங்களில் காணாத நாட்டின் மிகச் சக்திவாய்ந்த தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச பொருளாதாரத்தில் ஜி ஜின்பிங் பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தும் நிலையில், இந்த நிலை மீண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா-வின் பெல்ட் & ரோடு திட்டத்தின் நிலை என்ன.. சொந்த காசில் சூனியமா..?
சீனா
சீனாவின் நலிந்த பொருளாதாரம், அமெரிக்காவுடனான உறவுகள் மோசமடைந்து வருதல், ஜீரோ-கோவிட் கொள்கை மற்றும் அதன் மூலம் ஏற்பட்ட வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பாதிப்புகள் ஆகியவை ஜி ஜின்பிங் ஆதிக்கத்தை அந்நாட்டு அரசியலில் தடுமாறியது மறக்க முடியாது.
ஜி ஜின்பிங்
இந்த நிலையில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் மாநாட்டில் ஜி ஜின்பிங் ஆதிக்கத்தை மீண்டும் தொடர மூன்றாவது முறையாக மீண்டும் அதிபராகப் பதவியேற்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்
சீனா தற்போது மிகவும் முக்கியமான கட்டத்தில் உள்ளது, சர்வதேச சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தை நிரூப்பிக்க வேண்டி உள்ளது. இதேபோல் சீன கம்யூனிஸ்ட் கட்சி மீதான தனது பிடியையும் உறுதி செய்ய ஜி ஜின்பிங் முக்கியமானவராக இருக்கிறார். மேலும் ஜி ஜின்பிங் சீனாவில் மாவோ பிறகு மிகவும் சக்திவாய்ந்த சீனத் தலைவராக இருக்கிறார்.
பொலிட்பீரோ முடிவு
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 25 உறுப்பினர்களைக் கொண்ட பொலிட்பீரோ அதாவது உயர்மட்ட நிர்வாகக் குழு திங்கட்கிழமை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனமான சிசிடிவி-யின் அறிக்கையின்படி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தக் கூட்டம் இந்தக் காலகட்டத்தில் மிக முக்கியமானதாக இருக்கு, இதற்கான ஏற்பாடுகள் சுமுகமாக நடைபெற்று வருகிறது.
அக்டோபர் 16
அக்டோபர் 16ஆம் தேதி நடைபெறும் இக்கூட்டம் இந்த நிகழ்வில், நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2,300 கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் பெய்ஜிங்கிற்கு வந்து, சுமார் 200 உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்..
China Communist Party Congress meet: Xi Jinping reinstated as president for a third term
China Communist Party Congress meet: Xi Jinping reinstated as president for a third term சீனா: 3வது முறையாக அதிபராக ஜி ஜின்பிங்.. ஆக்.16 கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு..!