ஹைதராபாத் : தெலுங்கானாவில் அரசு மருத்துவமனையில் கருத்தடை சிகிச்சை செய்து கொண்ட நான்கு பெண்கள் உயிரிழந்தனர். தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டம் இம்ராஹிம்புரம் அரசு மருத்துவமனையில் கடந்த 25ம் தேதி, பெண்களுக்கான கருத்தடை முகாம் நடந்தது. இதில், 34 பெண்கள் சிகிச்சை செய்து கொண்டனர். அவர்களில் நான்கு பெண்கள்உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.இதையடுத்து, அவர்களின் உறவினர்கள் தவறான சிகிச்சையால் மரணம் ஏற்பட்டதாக கூறி போராட்டம் நடத்தினர். இது குறித்து விசாரித்து ஏழு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய, மாநில பொது சுகாதார துறை இயக்குனர் ஜி.ஸ்ரீனிவாச ராவுக்கு, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும், உயிரிழந்த நான்கு பெண்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : தெலுங்கானாவில் அரசு மருத்துவமனையில் கருத்தடை சிகிச்சை செய்து கொண்ட நான்கு பெண்கள் உயிரிழந்தனர்.தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டம் இம்ராஹிம்புரம் அரசு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்