இந்தியாவில் ஏறக்குறைய 27 மாதங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 31, 2022 முதல் உள்நாட்டு விமானக் கட்டணங்களின் விலை வரம்புகளை இந்திய அரசு நீக்கியுள்ளது.
விமான நிறுவனங்கள் இப்போது எந்த விலை வரம்புகளும் இல்லாததால், அவர்கள் விரும்பியபடி கட்டணங்களை அமைக்கலாம்.
இதனால் விமானங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் இருந்தாலும், சக நிறுவனங்களின் போட்டி காரணமாக
ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் விமான டிக்கெட் கட்டணம் குறையுமா?
விமானப் போக்குவரத்து அமைச்சகம்
மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் இந்த மாத தொடக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. “ஏர் டர்பைன் எரிபொருளின் (ATF) தினசரி தேவை மற்றும் விலைகளைக் கவனமாக ஆய்வு செய்த பிறகு விமானக் கட்டண உச்சவரம்புகளை அகற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சிப் பாதை
மேலும் விமானப் போக்குவரத்துத் துறையானது எதிர்காலத்தில் உள்நாட்டுப் போக்குவரத்தில் வளர்ச்சிக்குத் தயாராக உள்ளது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ட்வீட் செய்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர்
பிப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக, விமான எரிபொருள் விலை உச்சத்திற்குச் சென்ற நிலையில், கடந்த சில வாரங்களாக ATF விலைகள் குறைந்து வருகிறது.
லாக்டவுன்
COVID-19 தொற்றுநோய் காரணமாக இரண்டு மாதம் முழுமையான லாக்டவுன்-க்கு பின்பு மே 25, 2020 அன்று விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது. இப்போது விமானப் போக்குவரத்தை மேம்படுத்தவும் இத்துறையின் வளர்ச்சியை உறுதி செய்யவும் உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கு அமைச்சகம் குறைந்த மற்றும் மேல் வரம்புகளை விதித்தது.
விலை நிர்ணயம்
இந்த வரம்புகள் விதிக்கப்பட்டபோது, விமான நிறுவனங்கள் 40 நிமிடங்களுக்குக் குறைவான உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு ரூ.2,900 (ஜிஎஸ்டி தவிர) மற்றும் அதிகப்படியாக ரூ.8,800 (ஜிஎஸ்டி தவிர) ஒரு பயணியிடம் வசூலிக்க முடியாது.
பாதுகாப்பு
குறைந்த விலை வரம்பு மூலம் நிதி ரீதியாக நலிவடைந்த விமான நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காகவும், அதிகப்படியான விலை நிர்ணய கட்டணங்களிலிருந்து பயணிகளைப் பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்டன. ஆனால் இன்று சந்தை நிலை மாறியுள்ளதால் போட்டி போட விமானப் போக்குவரத்து சந்தை திறந்துவிடப்பட்டு உள்ளது.
Domestic airfares upper and lower cap is removed from August 31; What does it mean
Domestic airfares upper and lower cap is removed from August 31; What does it mean விமானக் கட்டணங்கள் உயருமா.. ஆகஸ்ட் 31 முதல் நடக்கப்போவது என்ன..?