ஐரோப்பாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசரின் எச்சங்கள் போர்ச்சுகலில் உள்ள தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. பொம்பல் நகரத்தில் ஒருவரின் இடத்தில் புதைபடிவ எலும்புத் துண்டுகள் பல ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்தன. இதை அவர் அரசுக்கு தெரிவித்தார். இதனையடுத்து லிஸ்பன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 2017 இல் அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கை தொடங்கினார்கள். அதன் தொடர்ச்சியாக, போர்ச்சுகலில் உள்ள ஒரு தோட்டத்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய டைனோசரின் எச்சங்களை பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்
இந்த எலும்புக்கூட்டின் மேல், ஜுராசிக் வண்டல் அடுக்குகள் இருந்தன. இதன் மூலம் 150 மில்லியன் ஆண்டுகள் வயதான எலும்புக்கூடுகள் இவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | நீல திமிங்கலம் போன்ற பிரம்மாண்டமான டைனோசர்களின் புதைபடிமங்கள்
இந்த மாத தொடக்கத்தில், ஆகழ்வாராய்ச்சித் தளத்தில் இருந்து ஸ்பானிய மற்றும் போர்த்துகீசிய பழங்கால ஆராய்ச்சியாளர்கள், பிராச்சியோசவுரிட் சவ்ரோபாட் என்று நம்பும் முதுகெலும்புகள் மற்றும் விலா எலும்புகளை கண்டுபிடித்தனர்.
நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு, மற்றும் அனைத்து டைனோசர்களிலும் மிகப்பெரியது, சோரோபாட் (sauropod) அல்லது சவ்ரோபாட் ஆகும். மிக நீண்ட கழுத்து, நீண்ட வால், பெரிய உடல் மற்றும் சிறிய தலை கொண்ட ஒரு தாவரத்தை உண்ணும் டைனோசர். டைனோசர் அதன் கழுத்து முதுகெலும்புகளில் சில சிறப்பு குணாதிசயங்களைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டது.
“ஒரு விலங்கின் அனைத்து விலா எலும்புகளும் இந்த நிலையில் இருப்பது ஒருபுறம் இருக்க, அவற்றின் அசல் உடற்கூறியல் நிலையைப் பேணுவது வழக்கம் அல்ல” என்று லிஸ்பன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எலிசபெட் மலாஃபாயா தெரிவித்துள்ளதாக, தி கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
போர்ச்சுகலில் உள்ள தோட்டத்தின் முற்றத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளின் அளவின்படி, டைனோசர் 12 மீட்டர் உயரமும் 25 மீட்டர் நீளமும் கொண்டதாக இருக்கும் என்று அனுமானிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | Neanderthals: மனிதர்களுடன் உடலுறவு கொண்டதால் நியண்டர்டால்கள் அருகியிருக்கலாம்
எலும்புக்கூட்டின் இயற்கையான தோரணையின் காரணமாக, இந்த அகழ்வாராய்ச்சியில் அதே டைனோசரின் பல எச்சங்கள் அதே இடத்தில் கிடைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
“இந்த கண்டுபிடிப்பு, பொம்பல் பகுதியில் ஜுராசிக் முதுகெலும்புகளின் முக்கியமான புதைபடிவங்கள் இருப்பதை உறுதிப்படுத்துகிறது, இந்த இடத்தில், கடந்த தசாப்தங்களில் இருந்த விலங்கினங்கள் தொடர்பான ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன. ஐபீரிய தீபகற்பத்தில் சுமார் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினங்களின் எச்சங்கள் கிடைத்திருப்பது ஊக்கத்தை அளிக்கிறது” என்று மலாஃபாயா மேலும் கூறியதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது,
ப்ரோன்டோசொரஸ் மற்றும் டிப்ளோடோகஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய சரோபோட் குழுவில் நீண்ட கழுத்து மற்றும் நான்கு கால்கள் கொண்ட தாவரவகை விலங்குகள் இருந்தன என்றும் நம்பப்படுகிறது.
மேலும் படிக்க | விநாயகர் சதுர்த்தி 2022: விக்னங்களை போக்கும் விநாயகர், கேட்ட வரம் தரும் கணபதி!!
மேலும் படிக்க | பாகிஸ்தானின் அவலநிலை தொடர்கிறது! வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ