மோடி அரசின் ONDC திட்டத்தில் NPCI அமைப்பு முதலீடு.. 10% பங்குகள் விற்பனை..!

இந்திய சந்தையில் வெளிநாட்டு ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்குப் போட்டியாக மத்திய அரசு உருவாக்கும் டிஜிட்டல் வர்த்தகத் தளம் தான் இந்த ஒபன் நெட்வொர்க்கில் (ONDC).

இந்த ONDC தளத்தில் இந்திய தேசிய பேமெண்ட்ஸ் அமைப்பு (NPCI) சுமார் 9-10% பங்குகளைக் கைப்பற்றத் திட்டமிட்டு வருகிறது. யுபிஐ டிஜிட்டல் பேமெண்ட் நெட்வொர்க்கை நிர்வகிக்கும் என்பிசிஐ, ஓஎன்டிசியில் சுமார் ரூ.10 கோடி முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான ஒப்புதல் ஏற்கனவே அளிக்கப்பட்டு உள்ள நிலையில் அடுத்த 10 நாட்களில் இந்த முதலீட்டுக்கான செயல்முறை முடிவடையும் என்று தெரிகிறது.

இந்திய ரீடைல் சந்தை

இந்திய ரீடைல் சந்தை விரைவில் 1 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை எட்டும் நிலையில் ஆன்லைன் ரீடைல் வர்த்தகப் பிரிவில் சுமார் 80 சதவீத வர்த்தகத்தை நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் கையில் மட்டுமே உள்ளது.

ONDC நெட்வொர்க்

ONDC நெட்வொர்க்

ONDC நெட்வொர்க் தற்போது 6 பெரு நகரங்களில் மளிகை பொருட்கள், சிறிய பேக்கரி பொருட்களுக்கான ஆர்டர் எடுத்து, டெலிவரி செய்யும் பணிகளைச் சோதனை செய்து வருகிறது.

 டிஜிட்டல் தளம்
 

டிஜிட்டல் தளம்

ஓபன் நெட்வொர்க் பார் டிஜிட்டல் காமர்ஸ் கட்டமைப்பு என்பது அனைத்து விதமான வர்த்தகம், சேவை, பணப் பரிமாற்றம் ஆகியவற்றை ஒரே டிஜிட்டல் அல்லது எலக்ட்ரானிக் நெட்வொர்க் கீழ் கொண்டு வரும் ஒரு திட்டம்.

பாங்க் ஆஃப் இந்தியா

பாங்க் ஆஃப் இந்தியா

இந்த முக்கியமான கட்டமைப்பில் NPCI அமைப்பு மட்டும் அல்லாமல் மத்திய அரசின் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (NSDL) மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவையும் ஓஎன்டிசியில் பங்குகளை வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டங்களும் 10 நாட்களில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 யூபிஐ சேவை

யூபிஐ சேவை

இந்தியாவின் யூபிஐ சேவை தற்போது உள்நாட்டில் அனைத்து தரப்பும் மக்களின் கைகளிலும் கூகுள் பே, போன்பே, பேடிஎம் வாயிலாக உள்ளது. இதுதவிர ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), பூட்டான், சிங்கப்பூர், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குச் செல்ல உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: npci upi ondc யூபிஐ

English summary

NPCI plans to buy 9-10 percent stake in modi govt e-commerce project ONDC

NPCI plans to buy 9-10 percent stake in modi govt e-commerce project ONDC மோடி அரசின் ONDC திட்டத்தில் NPCI அமைப்பு முதலீடு.. 10% பங்குகள் விற்பனை..!

Story first published: Wednesday, August 31, 2022, 16:59 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.