மாறி மாறி அட்டாக்.. போரில் சண்டையிட்டுக்கொள்ளும் ரஷ்ய – உக்ரைன் வீரர்கள்.. விடாத மோதல்!

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கி ஏறத்தாழ 6 மாதங்கள் ஆகிவிட்டன. போர் இன்னமும் நடந்துகொண்டிருக்கக்கூடிய நிலையில் தற்போது போர் குறித்த வீடியோ கட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்த போர் காரணமாக உக்ரைன் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் என அனைத்தும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் போர் இன்னும் முடிவுறா நிலையில், ரஷ்ய வீரர்களும் உக்ரைன் வீரர்களும் மாறி மாறி சண்டையிடும் காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளன.

சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் பேக்கர் வெளியிட்ட ஆவணத்தில், நேட்டோ படை கிழக்கு நோக்கி விரிவாக்கப்படமாட்டாது என சோவியத் யூனியன் பொதுச் செயலாளராக இருந்த மிக்கேல் கோர்ப்பசேவிடம் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு மாறாக முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக நேட்டோவில் இணைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2008 ஆம் ஆண்டு ஜார்ஜியா மற்றும் உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினராகும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதன் மூலம் உக்ரைனில் நேட்டோ நேரடியாக நிலைநிறுத்தப்படும் அபாயம் மேலெழுந்தது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் போருக்கு இதுதான் தொடக்கமாக அமைந்தது. ரஷ்யாவின் அண்டை நாடான அதிலும் தனது முன்னாள் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைனில் அமெரிக்காவின் நேட்டோ எப்படி நிலைநிறுத்த முடியும்? என ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அது ஒரு கட்டத்தில் போராக வெடித்தது. வெளியிலிருந்து பார்த்தால் இது ரஷ்யா-உக்ரைன் போர்.

ஆனால் இது உண்மைக்குமே ரஷ்யா-அமெரிக்க போராகதான் இருக்கிறது. கடந்த சில மாதங்களில் அமெரிக்க நாடாளுமன்றம் உக்ரைனுக்கு 5,400 கோடி டாலர் உதவித்தொகையை அளித்துள்ளது. இது ரஷ்யாவின் ராணுவ பட்ஜெட்டில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான தொகையாகும். இந்நிலையில், தொடர்ந்து நடந்து வரும் இந்த போரின் காரணமாக உக்ரைனின் உள்கட்டமைப்பில் 30 சதவீதம் தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், போர் தொடர்பாக புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், இரு தரப்பு வீரர்களும் மாறி மாறி துப்பாக்கியால் சுட்டு சண்டையிட்டுக்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பிஸ்கியில் உள்ள ஒரு பாலத்தில் இந்த சண்டை நடந்துள்ளது. பாலத்தின் அடியில் உக்ரைன் வீரர்களும், பாலத்திற்கு மேல் ரஷ்ய வீரர்களும் இருக்கின்றனர். எப்படியாயினும் போர்க்களத்தில் உயிரிழப்புகள் தவிர்க்க முடியாத நிலையில் இரு தரப்பிலும் போர் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.