வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: பீஹார் சென்றுள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அம்மாநில முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து மத்திய அரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது. 2024 லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
மத்தியில் ஆளும் பா.ஜ.,விற்கு மாற்றாக அணி அமைக்கும் முயற்சியில் மே.வங்க முதல்வர் மம்தா முயற்சி செய்து வருகிறார். அதேபோல், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி கட்சி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இதற்காக அவர் பல கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.
பீஹாரில், முதல்வராக இருந்த ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார், பா.ஜ., உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் பாட்னா சென்ற, சந்திரசேகர ராவ், நிதிஷ்குமாரை சந்தித்து பேசினார். மதிய உணவு அருந்திய இருவரும் தொடர்ந்து மத்திய, மாநில அரசியல் நிலவரம் குறித்து விவாதித்ததுடன், பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பின் போது ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவரும், துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவும் உடனிருந்தார்.
இந்த சந்திப்பு தொடர்பாக பா.ஜ.,வின் சுஷில் மோடி கூறுகையில், பகல்கனவு காணும் இருவர் ஒன்று சேர்ந்துள்ளனர். தங்களது மாநிலங்களில் ஆதரவை இழந்த இருவரும் சந்தித்து கொண்டு பிரதமராக விரும்புகின்றனர். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் சமீபத்திய நகைச்சுவை காட்சி இது என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement