ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு நிர்வாகம் கத்தார் நாட்டில் நடைபெறும் FIFA உலகக் கோப்பை காண வரும் பயணிகளுக்குப் புதிதாக ஒரு பலமுறை UAE நாட்டிற்குள் நுழையக் கூடிய விசாவை அறிவித்துள்ளது.
22வது FIFA உலகக் கோப்பைப் போட்டி 2022 ஆம் ஆண்டின் 20 நவம்பர் 20 முதல் 18 டிசம்பர் 2022 வரை கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இது அரபு நாடுகளில் நடைபெறும் முதல் உலகக் கோப்பையாகும், மற்றும் 2002 ஆம் ஆண்டுத் தென் கொரியா மற்றும் ஜப்பான் நடந்த போட்டிக்குப் பிறகு ஆசியாவில் நடைபெறும் இரண்டாவது உலகக் கோப்பையாகும்.
FIFA உலகக் கோப்பை 2022 போட்டியில் 32 அணிகள் பங்கேற்கும், 2026 ஆம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெறவுள்ள போட்டியில் 48 அணிகள் பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது.
FIFA உலகக் கோப்பை 2022
FIFA உலகக் கோப்பை 2022 போட்டியை கத்தார் நாட்டில் பார்க்க விரும்புவோர் அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் Hayya card கட்டாயம் வாங்க வேண்டும். இப்படி Hayya card வைத்துள்ளவர்களுக்குச் சிறப்புக் கட்டணமாக 100 ஐக்கிய அரபு திர்ஹாம் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 2,164 ரூபாய்க்கு ஹய்யா கார்டு வைத்திருப்பவர்கள், 90 நாட்களுக்குள் UAEக்குள் பலமுறை நுழையும் விசா அளிக்க முடிவு செய்துள்ளது.
ஹய்யா கார்டு
ஹய்யா கார்டு என்பது FIFA உலகக் கோப்பை 2022 போட்டியை பார்க்க கத்தார் வரும் உலக நாடுகளில் இருக்கும் ரசிகர்களுக்காக என்டரி விசா அல்லது fan id ஆகக் கொடுக்கப்படுகிறது. இது FIFA உலகக் கோப்பை 2022 நடக்கும் காலகட்டத்தில் முக்கிய ஆவணமாகப் பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டுப் பயணிகள்
FIFA உலகக் கோப்பை 2022 கத்தார் நடத்தும் நிலையில் இதற்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், வெளிநாட்டு பயணிகளைத் தனது நாட்டிற்கும் ஈர்க்கும் வகையிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
90 நாட்கள்
நவம்பர் 1, 2022 மற்றும் ஜனவரி 23, 2023 க்கு இடையில் கத்தாருக்குச் செல்லும் அனைத்து பயணிகளுக்கும் ஹயா அட்டை கட்டாயமாகும். ஹயா அட்டை வைத்திருப்பவர்கள் சாதாரண விலையில் மேலும் 90 நாட்களுக்கு விசாவை நீட்டிக்க முடியும்.
சலுகை
ஹயா அட்டை பெறுவதன் மூலம் கத்தார் நாட்டிற்கு நுழைவது மட்டும் அல்லாமல் ஸ்டேடியம் செல்லவும், இலவசமாகக் கத்தார் நாட்டின் மெட்ரோ பயன்படுத்தவும், இலவசமாகப் பஸ் பயன்படுத்தவும் முடியும்.
FIFA World Cup 2022: UAE announces multiple-entry tourist visa for Hayya Card holders with just 100 AED
FIFA World Cup 2022: UAE announces multiple-entry tourist visa for Hayya Card holders with just 100 AED | FIFA உலகக் கோப்பை: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்த புதிய விசா..!