தும்கா : ஜார்க்கண்டில், மதிப்பெண் குறைவாக வழங்கியதால் ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவர்கள் ஆசிரியர் மற்றும் அலுவலக ஊழியரை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் உள்ள கோபிகந்தர் கிராமத்தில், பழங்குடியினருக்கான அரசு உண்டு உறைவிடப் பள்ளி உள்ளது.
இங்கு, 200 பேர் தங்கிப் படிக்கின்றனர். ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது.இதில், 11 பேர் தேர்ச்சி அடையவில்லை.இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், பள்ளியின் கணித ஆசிரியர் சுமன் குமார் மற்றும் பள்ளி அலுவலர் சோனேராம் சவுரே ஆகிய இருவரையும் பள்ளி வளாகத்தில் இருந்த மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.
அவர்களுடன் சேர்ந்து மற்ற மாணவர்களும் தாக்குதலில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்த கோபிகந்தர் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். ஆனால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் புகார் கொடுக்க விரும்பவில்லை என ஆசிரியர் சுமன் குமார் கூறிவிட்டார்.இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement