தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அனைத்திற்கும் கருத்து கூறும் நிலையில் கனியாமூர் மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு மட்டும் இது வரை ஏன் கருத்தோ அல்லது கண்டனமோ தெரிவிக்கவில்லை என
கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி மிகக் கடுமையாக குறைந்திருப்பதாகவும், அதன் பொருள் இந்திய நாட்டின் பொருளாதாரம் மோடி ஆட்சியில் வீழ்ந்திருக்கிறது என கே.எஸ் அழகிரி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.பாஜக சோதனை என்ற பெயரில் விசாரனை அமைப்புகளை ஏவல் நாய்கள் போல் அவிழ்த்து விடுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் திருவண்ணாமலை மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில் “கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புக்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வந்த நிலையில் இது வரை பாஜக தலைவர் எவ்வித கருத்தும் கூறாமல் இருப்பதை சுட்டிக் காட்டினார்.
அண்ணாமலை கருத்து கந்தசாமி போல அனைத்திற்கும் கருத்து கூறும் நிலையில் மாணவி மரணத்திற்கு மட்டும் இது வரை கருத்தோ அல்லது கண்டனமோ ஏன் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பிய அவர், ஏற்கனவே ஒரு குழந்தை இறப்பிற்கு உச்சநீதி மன்றம் வரை சென்றவர்கள் கனியாமூர் பள்ளி மாணவி இறப்பிற்கு மட்டும் ஆர்வம் காட்டாமல் இருப்பதின் மர்மம் என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பினார்,
கே.எஸ்.அழகிரியின் இந்த பேட்டி பெரும் பேசு பொருள் ஆகியுள்ளது…