வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
ஜெய்பீம் படத்தில் ராஜாக்கண்ணுவாக நடித்து நம் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகர் மணிகண்டன் இயக்கத்தில் உருவான படம் “நரை எழுதும் சுயசரிதம்!”. இந்த ஆண்டு துவக்கத்தில் ஒடிடி-யில் வெளியானது.
ஔவையாரின் “கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது, கொடிது கொடிது முதுமையில் தனிமை கொடிது!” என்ற வார்த்தைகளை மையமாக கொண்டு மணிகண்டன் உருவாக்கிய ஒரு அழகான, எளிமையான கதைக்களத்தில் டெல்லி கணேஷ், மிர்ச்சி சிவசங்கரி, ஆதவன், விஜே விஜய், மணிகண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றில் கலந்துகொண்டு பல விருதுகள் வென்றுள்ளது. இத்தகு சிறப்புகள் கொண்ட இந்தப் படத்தை பற்றிய என் பார்வை சில வரிகளில்…
அலுவலக பதிவுகள் அனைத்தும் கம்ப்யூட்டரைஸாக மாற இருப்பதால் ஒன்பது மாதங்கள் மட்டுமே பணிக்காலம் கொண்ட டெல்லி கணேஷ்க்கு கம்பெனியிலிருந்து ரிட்டையர்மெண்ட் கொடுக்கிறார்கள். வேலை பறிபோனதையும் ரிட்டையர்மெண்ட் சிறப்பு நிகழ்வில் ஊழியர்கள் அவரை பெரிதாக கண்டுகொள்ளாததையும் கண்டு வருத்தமடையும் டெல்லி கணேஷ் குடும்ப உறுப்பினர்களிடமும் தனது அலுவலகத்தில் குடியேறியிருக்கும் தொழில்நுட்பங்களையும் மாடர்ன் இளைஞரிடமும் கோபம் கொள்கிறார். தன்னை எல்லோரும் புறக்கணிப்பதாக, தரக்குறைவாக நினைப்பதாக நினைத்து வருந்தும் அவர் ஒருநாள் இரவில் மது அருந்திவிட்டு ஸ்கூட்டியில் பயணிக்கும்போது சாலையோரம் நடந்து செல்லும் இளைஞர் மணிகண்டன் மீது மோதிவிடுகிறார். அப்போது இருவருக்கும் கைத்தகராறு ஆகிறது. அந்த தகராறு மாற்றமடைந்து நட்பாகவும் மலர்கிறது.
பரபரப்பும் நெரிசலும் மிகுந்த சென்னை மாநகரத்திற்கு கிராமப்புறத்திலிருந்து வேலை தேடிவந்து நண்பனின் அறையில் தங்கியிருக்கும் இளைஞனாக மணிகண்டன். பலநாட்கள் உணவு இல்லாமல் கடனாக டீயை (அவமான டீ) மட்டுமே அருந்தி உயிரை தக்க வைத்துக்கொண்டு கிழிந்துபோன பேண்டும், அறுந்துபோன செருப்பும், கசங்கிபோன சட்டையும், பரட்டை தலையும் அடர்தாடியுமான தோற்றத்துடன், வேலைதேடி பலபடிகள் ஏறி இறங்குகிறார். எல்லா பக்கமும் ஏதோவொரு காரணம் சொல்லி நிராகரிக்கிறார்கள். சிலர் அவரது உடையை கண்டு எள்ளி நகையாடுகிறார்கள். இந்நிலையில் விரக்தியுடன் சாலையில் நடந்து செல்லும்போது தான் டெல்லி கணேஷூடன் மோதல் ஏற்பட்டு அது நட்பாக மலர்கிறது.
இருவரும் நண்பர்களாக மாறிய பிறகு இருவருடைய வாழ்க்கையிலும் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகிறது என்பது மீதிக்கதை. இளையோரும் முதியோரும் சந்திக்கும் கதை என்றால் முதியோர் அறிவுரையாக சொல்லுவார்கள் அதைக்கேட்டு இளைஞர் மாறுவார் என்பதுதான் இவ்வளவு கால சினிமாவில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்தப்படம் இரண்டும் கலந்ததுமாக அமைந்துள்ளது.
டெல்லி கணேஷ் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஆகச்சிறந்த நடிகர். மணிரத்னம் தயாரிப்பில் வெளியான நவரசா படத்தில் உள்ள “பாயாசம்” குறும்படம் எவ்வளவு கொண்டாடப்பட்டதோ அதே அளவுக்கு டெல்லி கணேஷை “நரை எழுதும் சுயசரிதம்” என்கிற இந்தப் படத்திற்காக தாராளமாக கொண்டாடலாம். இந்த தலைமுறையோடு ஒட்டாதவராக இருந்து பிறகு படிப்படியாக இந்த தலைமுறையை புரிந்துகொள்ளும்போது அவரது குடும்பத்தினருடைய தவறான புரிதல் சோகத்தை ஏற்படுத்துகிறது.
கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து உணவு உண்ணவும், பேருந்தில் பயணிக்கவும், காசு இல்லாமல் நடந்தே வேலைதேடி அலையும் இளைஞராக மணிகண்டன், லட்சக்கணக்கான கிராமப்புற இளைஞர்களின் முகமாக நம் மனதுக்குள் நடிகராக ஆழமாக ஊடுருவிச் செல்கிறார். அதேசமயம் வறுமை, வேலையின்மை, தலைமுறை இடைவெளி போன்ற விஷியங்களை மிக அழகாகவும் அழுத்தமாகவும் காட்சிப்படுத்தி நெகிழ வைத்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.
“நரை எழுதும் சுயசரிதம்!” – நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
ஒரு பவுன் என்ன விலை? இந்த கேள்விக்கு உங்களில் யாரேனுக்கும் விடை தெரியுமா? இப்ப சொல்ல வேண்டாம். நான் அப்புறம் கேட்கிறேன் சொல்லுங்க.. இப்ப நம்ம அந்த சிறிய நகை கடையில் ஒரு பவுன் செயின் வாங்கி அதை ஆவலோடு தன் கழுத்தில் அணிந்து கொண்டு வரும் பாட்டியை பின்தொடர்வோம்… அன்னபூரணி என்பதை விட பனியார பாட்டி என்றால் அந்த சிறிய ஊரில் அனைவருக்கும் தெரியும்.
திருமணமாகி அந்த ஊருக்கு அவர் வரும்போது 18 வயது, அவரைபோலவே அவர கணவரும் யாருமற்றவர் ,சிறிய ஓட்டு வீடு,கணவரின் சொற்ப வருமானம் ஆனால் மகிழ்வான வாழ்க்கை அதன் பலனாய் நாட்கள் தள்ளி போக, அந்த சந்தோசத்தை கணவரிடம் சொல்ல காத்திருக்கையில், அவனோ விபத்தில் சிக்கி சடலமாக வாசலில் இறக்கி வைக்கப்பட்டான். பல நாட்கள் நிலைகுலைந்து கிடந்த அவளை மீட்டெடுத்தது வயிற்றில் இருந்த கருவும்,பனியாரமும் தான்..
சடலம் கிடந்த அதே இடத்தில் சிறிய விறகு அடுப்பு, ஒரு பனியார சட்டியோடு கடை போட்டவர் இந்த 63 வயது வரை அவரின் உலகம் அந்த பனியாரசட்டி தான். இத்தனை நாட்களில் அவர் கடை போடாத நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.பேறுகால வலி துவங்கியதும் அந்த சட்டியின் முன்தான். பிள்ளை பெற்று 3ம் நாள் பச்சை குழந்தையுடன் அவர் பனியாரசட்டியின் முன் அமர்ந்தபோது ஊரே அவரின் வைராக்கியத்தை கண்டு வியந்தது…
நகை கடையில் இருந்து நேராக வீட்டுக்கு வந்ததும் கடையை துவங்கினார் அன்னபூரணி. வழக்கமான வேலைகள் ஆனால் மனம் ஆகாயத்துக்கும் பூமிக்கும் துள்ளி குதித்தது.. இடையிடையில் கழுத்தில் மின்னும் செயினை வாஞ்சையோடு தடவி கொடுத்துக்கொண்டே அன்றைய வேலையை முடித்து கொண்டு கதவை சாத்திவிட்டு தலையணைக்கடியில் இருந்து அந்த கடிதத்தை எடுத்து பார்த்து கொண்டே கண்களை மூடினார். மனம் கடித்தில் இருந்த வரிகளை (அனேகமாக இது ஆயிரமாய் முறையாக இருக்கலாம்) சலைக்காமல் அசை போட்டபடியே மகிழ்ச்சி கடலில் மூழ்கியது.