தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் சார்பில், புத்தக கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ரவி மாணிக்கம் தலைமை வகித்தார்.
மேலும், ரோட்டரி மாவட்ட பப்ளிக் இமேஜ் தலைவர் முத்துச்செல்வம் மற்றும் ஜே.சி.ஐ தலைவர் பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த புத்தக கண்காட்சியினை ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர் டாக்டர் சம்பத்குமார் தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மாரியப்பன், கிருஷ்ணசாமி, தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் ரமேஷ், ராஜபாண்டி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த புத்தக கண்காட்சியில் தேச தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, அறிவியல், மருத்துவம், கணிதம், ஆன்மீகம், போட்டித் தேர்வு நூல்கள், தன்னம்பிக்கை, சிறுவர் நூல்கள், நாவல், இலக்கியம் என பத்தாயிரம் தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், அனைத்து புத்தகங்களுக்கும் 10% சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த புத்தக கண்காட்சி இன்று முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட உள்ளது.