இமாம் ஒருவரை நாட்டை விட்டு வெளியேற்ற பிரான்ஸ் உயர் நிர்வாக நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது என்று பிரான்சு நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மான் தெரிவித்துள்ளார். வெறுப்பூட்டும் பேச்சுகளை பேசிய குற்றச்சாட்டுக்காக, இமாம் ஹசன் இக்யுஸ்சென், மொராக்கோவிற்கு நாடு கடத்தப்படுகிறார் என்று பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் வெளியிட்ட டிவிட்டர் செய்தி கூறுகிறது.
“குடியரசுக்கு ஒரு பெரிய வெற்றியாக” ஹாசன் இக்யுசென் “தேசிய பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்” என்று டார்மானின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் மாநில கவுன்சிலின் முடிவை மேற்கோள் காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.
Ce matin, sur mon instruction, le @Prefet95 a fait procéder à l’expulsion des occupants du logement de l’auteur du rodéo qui avait blessé grièvement deux enfants le 5 août dernier. https://t.co/zBPMWzJyr8
— Gérald DARMANIN (@GDarmanin) August 30, 2022
பாரிஸ் நீதிபதிகள் இமாமை நாடு கடத்துவது தேவையில்லை என்று கூறி, அதைத் தடுத்ததை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யபப்ட்டது. ஜூலை பிற்பகுதியில் “குறிப்பாக கடுமையான யூத-விரோத பேச்சு” மற்றும் ஆண்களுக்கு பெண்கள் “சமர்ப்பணம்” என்பது போன்ற இமாமின் பிரசங்கங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும் படிக்க | பாஜகவுக்கு தண்ணிகாட்டும் ஹேமந்த் சோரன் -‘ஆபரேஷன் தாமரை’ ஜார்க்கண்டில் வெற்றிபெறுமா
58 வயதான இமாம் ஹசன் இக்யுஸ்சென் யூடியூப் மற்றும் பேஸ்புக்கில் இருக்கிறார். சமூக ஊடகங்கள் மூலம் அவர் பல்லாயிரக்கணக்கான பின்தொடர்பாளர்களை கொண்டுள்ளார். ஹசன் இக்யுஸ்சென் ,தற்போது வடக்கு பிரான்சில் வசிக்கிறார். அவர் மொராக்கோ குடியுரிமை பெற்றவர், ஆனால் பிரான்சில் பிறந்தவர்.
மொராக்காவுக்கு ஹசன் இக்யுஸ்சென் அனுப்பப்படுவது, இமாமின் “தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு” தீங்கு ஏற்படுத்தும் என்று அவருடைய வழக்கறிஞர்கள் இந்த உத்தரவைத் தடுக்க பாரிஸ் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
கடந்த வாரம் இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்திற்கு வந்தபோது, இமாம் நாடு கடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அரசு வழக்கறிஞர் எடுத்துரைத்தார். “இக்யுசென் பல ஆண்டுகளாக நயவஞ்சகமான கருத்துக்களை பரப்பி வருகிறார், இது வெறுப்பு, பாகுபாடு மற்றும் வன்முறையைத் தூண்டுவதைத் தவிர வேறொன்றுமில்லை” என்று அரசு தரப்பு தெரிவித்தது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த இமாமின் வழக்கறிஞர், யூத எதிர்ப்பு அல்லது பெண் வெறுப்பு பேச்சு உட்பட சில கருத்துக்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலானவை என்று பதிலளித்தார். இமாம் வெளியிட்ட வெளிப்படையான அறிக்கைகளுக்காக அவர் மீது ஒருபோதும் வழக்குத் தொடரப்படவில்லை என்று கூறப்பட்டது.
மேலும் படிக்க: Tamilnadu Split : இரண்டாக பிரிகிறதா தமிழ்நாடு? பா.ஜ.க-வின் திட்டம் என்ன!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ