பேஸ்புக் கேமிங் செயலி வெளியிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் தளத்தில் இருந்து நீக்க முடிவு செய்து, விரைவில் மூடப்படும் என்று பேஸ்புக் அறிவித்துள்ளது.
சீனாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்த லைவ் காமெர்ஸ் சேவையைப் பேஸ்புக் உலக நாடுகளில் லைவ் ஷாப்பிங் என்ற பெயரில் அறிமுகம் செய்தது.
இந்தச் சேவைக்குப் பெரிய அளவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்காத நிலையிலும், விரும்பாத நிலையிலும் பேஸ்புக் தனது லைவ் ஷாப்பிங் சேவையை வருகிற அக்டோபர் 1, 2022 முதல் நிறுத்த முடிவு செய்து சில ஆகஸ்ட் மாத துவக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் பேஸ்புக் கேமிங் செயலியை நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
எல்லாரும் சூனா பானா ஆக முடியுமா? பேஸ்புக் படுதோல்வி.. அக்டோபர் 1 முதல் புல்ஸ்டாப்..!
பேஸ்புக் நிறுவனம்
பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், கேமிங் ஆப் அக்டோபர் 28, 2022 முதல் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் இரண்டிலிருந்தும் அகற்றப்படும் என்றும் அறிவித்தது.
கேமிங் ஆப்
ட்விட்ச் மற்றும் யூடியூப் தளத்திற்குப் போட்டியாகக் கேம் ஸ்ட்ரீமிங் மற்றும் கேமிங் தளத்தை 2018 இல் Facebook வெளியிட்டது. அந்த நேரத்தில் இ-ஸ்போர்ட் சமூகங்கள் அனைத்தும் ஆன்லைன் கேமிங்-ல் தீவிரமாக இருந்தன.
ஸ்ட்ரீமிங் செயலியான Mixer
2020 பேஸ்புக் கேமிங் சேவைக்காகத் தனி ஆப் ஒன்றையும் அறிமுகம் செய்தது. இதை அடிப்படையாக வைத்து பேஸ்புக் தனது கேமிங் தளத்திற்காக இதே 2020 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட்-ன் ஸ்ட்ரீமிங் செயலியான Mixer-யும் பேஸ்புக் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
காரணம்
இப்போது, பேஸ்புக் இந்தக் கேமிங் செயலியை மூடுகிறது மற்றும் அதை ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்குகிறது. பேஸ்புக் நிறுவனம் ஏன் இந்தக் கேமிங் ஸ்ட்ரீமிங் பயன்பாட்டை மூடுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
வெப் பயன்பாடு இயங்கும்
பேஸ்புக் முடக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இதேவேளையில் பேஸ்புக் அதன் வெப் அடிப்படையிலான கேமிங் சேவையைத் தொடரும். இது Facebook இன் முக்கியச் சமூக ஊடக செயலியிலும் கிடைக்கும் என்று விளக்கம் கொடுத்துள்ளது.
Facebook shutting down its standalone Gaming app after stopping live shopping feature
Facebook shutting down its standalone Gaming app after stopping live shopping feature பேஸ்புக்: அடுத்தடுத்துச் சேவைகள் மூடல்.. மார்க் ஜூக்கர்பெர்க் திட்டம் என்ன..?