உக்ரைனிய படைகள் எதிர் தாக்குதலை நடத்த தவறிவிட்டனர் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல்.
மூன்று ஹெலிகாப்டர்கள் மற்றும் நான்கு போர் விமானங்களை இழந்தது உக்ரைன்.
ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைனிய இராணுவ படைகள் எதிர்தாக்குதல் நடத்த தவறிவிட்டதாக புதன்கிழமை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருநாட்டுகளுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை தோல்வி முடிவடைந்து, புதிய பேச்சுவார்த்தைகளும் இதுவரை முன்னெடுக்கப்படாத நிலையில் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் ஏழாவது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த போர் தாக்குதலில் ரஷ்ய படைகளின் நகர்வு நிதானமடைந்த இருக்கும் சூழ்நிலையில், ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை திரும்ப பெறும் முயற்சியில் உக்ரைனிய படைகள் எதிர்தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர்.
UKRAINIAN ARMY PHOTO
அந்தவகையில் தற்போது உக்ரைனின் தெற்கு பகுதியான கெர்சனில் உக்ரைனிய படைகளுக்கும், ரஷ்ய படைகளுக்கும் இடையே போர் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் புதன்கிழமை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ள தகவலில், உக்ரேனிய இராணுவப் படைகள் நாட்டின் தெற்குப் பகுதியில் எதிர் தாக்குதலை நடத்தத் தவறிவிட்டதாகவும், அதற்கான விளைவாக பெரும் இழப்புகளைச் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: என்னுடைய இயக்குநரை பார்த்ததில் மகிழ்ச்சி…பாரதிராஜாவை சந்தித்த பின் நடிகை ராதிகா நெகிழ்ச்சி!
Getty Images
மைக்கோலைவ் (Mykolaiv) மற்றும் க்ரிவி ரிஹ் (Kryvyi Rih) நகரங்களைச் சுற்றி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் போர் தாக்குதலில் உக்ரைன் மூன்று ஹெலிகாப்டர்கள் மற்றும் நான்கு போர் விமானங்களை இழந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.