சென்னை : மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி உள்ள ‘காசேதான் கடவுளடா’ ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
மிர்ச்சி சிவா, யோகி பாபு, பிரியா ஆனந்த், மனோபாலா, குக் வித் கோமாளி புகழ், சிவாங்கி, கருணாகரன்,தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மசாலா பிக்ஸ் மற்றும் MKRP புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை ஆர் கண்ணன் இயக்கி உள்ளார்.
காசேதான் கடவுளடா
1972ம் ஆண்டு வெளியான நகைச்சுவைத் திரைப்படம் தான் காசேதான் கடவுளடா. இத்திரைப்படத்தில் லட்சுமி, மனோரமா, முத்துராமன், தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாநத், வெண்ணிற ஆடை மூர்த்தி என பல நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள். இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற ஜம்புலிங்கமே ஜடாதரா என்ற பாடல் மிகப்பெரிய அளவில் பெற்றி பெற்றது.
மிர்ச்சி சிவா நடிப்பில்
காசேதான் கடவுளடா திரைப்படத்தை ரீமேக் செய்யும் முயற்சியை கையில் எடுத்த இயக்குனர் ஆர் கண்ணன். முத்துராமன் கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவாவும், தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரத்தில் யோகி பாபுவும், மனோரமா கேரக்டரில் ஊர்வசியும் நடிக்கின்றனர். மேலும், பிரியா ஆனந்த், குக் வித் கோமாளி புகழ், சிவாங்கி, கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து நடித்துள்ளனர்.
விறுவிறுப்பான படப்பிடிப்பு
ஜூலை மாதம் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று நிலையில், கிட்டத்தட்ட ஒரு மாத காலம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
ரிலீஸ் தேதி அறிவிப்பு
இந்நிலையில், காசேதான் கடவுளடா ரீமேக் திரைப்படத்தில் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திலிருந்து இன்று பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் அக்டோபர் 7 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்ததுடன் இதுவாது நல்லா இருக்குமா இல்ல தில்லமுல்லு படம் மாதிரியே மொக்கையா இருக்குமா என கேட்டு கிண்டலடித்து வருகின்றனர்.