பிரதமர் மோடியின் சாப்பாட்டு செலவு விபரம் ..! – தகவல் அறியும் உரிமை சட்டம் அளித்த பகீர் தகவல்..!

பிரதமர் மோடியின் சாப்பாட்டு செலவு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கோரப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்த பிரதமர் அலுவலகச் செயலாளர் பினோத் பிஹாரி சிங்,” பிரதமரின் உணவுக்காக அரசு பட்ஜெட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட செலவிடப்படவில்லை. பிரதமரின் இல்லம் இந்திய மத்திய பொதுப்பணித் துறையால் பாதுகாக்கப்படுகிறது. அதே சமயம் வாகனங்களின் பொறுப்பு எஸ்பிஜி பொறுப்பில் உள்ளது என்றும் கூறினார்.
மேலும் , நாடாளுமன்றத்தில் இயங்கும் கேன்டீன் தொடர்பாக தற்போதைய அரசு பல சீர்திருத்தங்களை செய்துள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஜனவரி 19, 2021 அன்று நாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்தார். 2021ஆம் ஆண்டுக்கு முன், பார்லிமென்ட் கேன்டீன்களில் ரூ.17 கோடி மானியமாக செலவிடப்பட்டது என்று பிரதமர் அலுவலகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் சாப்பாட்டு செலவு தொடர்பான விவகாரம் பேசு போரும் ஆகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.