பட்டிகட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு வித்யாசமான தண்டனை வழங்கிய காவல்துறையினர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பள்ளி கல்லூரி நேரங்களில் மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு செல்ல பேருந்தை பயன்படுத்துவர். அதே நேரத்தில் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் படிக்கட்டுகளில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வாரத்தில் மட்டும் இரண்டு பள்ளி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டு பயணத்தால் தவறி விழுந்துள்ளனர். அதில் , ஒரு மாணவன் பரிதாபமாக பலியானார்.
தமிழகத்தின் பல இடங்களிலும் பள்ளிகல்லூரி மாணவர்கள் படிக்கடியில் பயணம் செய்யும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்ற நிலையில் கடலூர் மாவட்டத்தில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேருந்து ஒன்றில் மாணவர்கள் படிக்கடில் பயணம் செய்தனர்.
படியில் பயணம்… நொடியில் மரணம்…
பேருந்து படிகட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு நூதன முறையில்
விழிப்புணர்வு… pic.twitter.com/odoscASbRp— Dr. R. Stalin IPS (@stalin_ips) August 31, 2022
அந்த பேருந்தை வழிமறித்த காவல்துறையினர் அவர்களை கீழே இறங்க வைத்து படிக்கட்டு பயணம் நொடியில் மரணம் என அறிவுரை வழங்கினர்.மேலும், அவர்களை நொண்டியடிக்கவைத்து கால்கள் இல்லையெனில் வாழ்க்கை கஷ்டம் என தெரிவித்தனர். அவர்களுக்கு அறிவுரை வழங்கி இனி படிகட்டில் பயணம் செய்ய கூடாது என தெரிவித்தனர். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், பள்ளி கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.