சென்னை : நடிகர் சூர்யா பல படங்களில் வித்தியாசம் காட்டி நடித்து வருகிறார். அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.
Recommended Video
சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் அவரது ரோலக்ஸ் கேரக்டர் மிரட்டலாக அமைந்தது. கேங்ஸ்டர் கேரக்டரில் கலக்கியிருந்தார்.
முன்னதாக அவர் வில்லனாக நடித்திருந்த 24 படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யாவின் 24 படம்
நடிகர் சூர்யா, நித்யா மேனன், சமந்தா, சரண்யா பொன்வண்ணன், அஜய், மோகன் ராமன் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 2016ம் ஆண்டு வெளியானது 24. விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் 3 கெட்டப்புகளில் சூர்யா நடித்திருந்தார். அவரது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்திருந்தது.
சூர்யா -சமந்தா கெமிஸ்ட்ரி
ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் படத்தின் பாடல்களும் சிறப்பான விமர்சனங்களை பெற்றன. சமந்தா, நித்யா மேனன் இருவருமே இந்தப் படத்திற்கு ஸ்பெஷல் அட்ராக்ஷனை கொடுத்திருந்தனர். குறிப்பாக சமந்தா இந்தப் படத்தில் அனைவரையும் கவர்ந்திருந்தார். சூர்யா -சமந்தா ஜோடியின் கெமிஸ்ட்ரி இந்தப் படத்தில் பேசப்பட்டது.
வில்லனாக கலக்கிய சூர்யா
இந்நிலையில் இந்தப் படத்தில் சூர்யா முதல்முறையாக வில்லனாகவும் கலக்கியிருந்தார். நடக்க முடியாத கேரக்டராக அனைவரின் பரிதாபத்தையும் சந்திக்கும் அவர் தன்னுடைய சகோதரரின் கண்டுபிடிப்பிற்காக வில்லனாக மாறும் கான்செப்ட் படத்தில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டது. தன்னுடைய சகோதரரின் மகன் என்றும் பாராமல் அவர் செய்யும் வில்லத்தனம் மிரட்டியது.
ரயில் ஸ்டண்ட் காட்சிகள்
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் ரயில் ஸ்டண்ட் காட்சிகளின் மேக்கிங் வெளியாகியுள்ளது. வெளிநாட்டில் படம்பிடிக்கப்பட்டுள்ள இந்த ஸ்டண்ட் காட்சிகள் மிரட்டலாக எடுக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகள் கழித்து வெளியான நிலையிலும் இந்த மேக்கிங் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஸ்டண்ட் காட்சிகளில் விருப்பம்
இந்த ஸ்டண்டின் இறுதியில் தான் ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பதற்கு மிகவும் விருப்பமாக இருப்பதாக சூர்யா கூறுவது போல இந்த மேக்கிங் வீடியோ அமைந்துள்ளது. பெரிய பிரிட்ஜிலிருந்து சூர்யா குதிப்பது போன்ற காட்சிகள் இந்த வீடியோவில் அமைந்துள்ளது. ட்ரெயின், பைக்குகள் என அடுத்தடுத்த பரபரப்போடு இந்த மேக்கிங் வீடியோ காணப்படுகிறது.