ஆசிய கிண்ணம்… சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்திய அணி


15வது ஆசிய கிண்ணம் கிரிக்கெட் தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிராக 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற ஹாங்காங் அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.
இதனையடுத்து இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கினர்.

பவர்பிளேவில் இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ரோகித் சர்மா 13 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆயுஷ் ஷுக்லா பந்துவீச்சில் ஐசஸ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து விராட் கோஹ்லி – கே எல் ராகுல் ஜோடி சேர்ந்தனர்.

ஆசிய கிண்ணம்... சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்திய அணி | India Beat Hong Kong By40 Runs

ஹாங்காங் அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதால் இந்திய ஜோடியால் தொடக்கத்தில் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட முடியவில்லை.
கே.எல் ராகுல் 39 பந்துகளில் 36 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் விராட் கோஹ்லியுடன் இணைந்து அதிரடி ரன்குவிப்பில் ஈடுபட்டார்.
இதனால் இறுதி கட்டத்தில் இந்திய அணியின் ரன் கணக்கு உயர்ந்தது. விராட் கோஹ்லி 40 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

இறுதி ஓவரில் சூர்யகுமார் யாதவ் 4 சிக்சர்கள் அடித்து சிக்சர் மழை பொழிந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் குவித்தது.
கோஹ்லி 59 ஓட்டங்கள் (44 பந்துகள்) சூர்யகுமார் யாதவ் 68 ஓட்டங்கள் (26 பந்துகள்) எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆசிய கிண்ணம்... சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்திய அணி | India Beat Hong Kong By40 Runs

இதையடுத்து 193 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்கியது.
தொடக்க வீர்ரகளாக களமிறங்கிய கேப்டன் நிசாகத் கான் (10 ஓட்டங்கள்), யாஸிம் முர்தசா (9 ஓட்டங்கள்) ஏமாற்றம் அளித்தனர்.

சிறப்பாக விளையாடி வந்த பாபர் ஹயாத் 35 பந்துகளில் 41 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் அவேஷ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து சீரான இடைவெளியில் ஹாங்காங் அணி வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

அந்த அணியின் கிஞ்சித் ஷா 30 ஓட்டங்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். இருப்பினும் இந்திய அணியின் இலக்கை அடையும் அளவிற்கு ஹாங்காங் வீரர்கள் சோபிக்கவில்லை.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹாங்காங் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

ஆசிய கிண்ணம்... சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்திய அணி | India Beat Hong Kong By40 Runs

இதன் மூலம் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-வது அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் குமார், ஜடேஜா, அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் தலா 1 விக்கெட்கள் கைப்பற்றினர்.
‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான் அணி ஏற்கனவே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.