மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,85,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணைக்கு வரும் நீர் முழுமையாக நீர் மின் நிலையங்கள் வழியாகவும், உபரி நீர் போக்கி வழியாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 1,62,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் உபரி நீர் போக்கி கால்வாய் வெள்ளக்காடாக காணப்படுகிறது.
இதனால், சங்கிலி முனியப்பன் கோவில் அருகே மேட்டூர் எடப்பாடி சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவழியாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
மேட்டூர் அணையிலிருந்து தற்போது நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,௦௦௦ கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 1,62,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து, உபரி நீர் போக்கி கால்வாய் பகுதியில் அமைந்துள்ள அண்ணா நகர் மற்றும் பெரியார் நகர் பகுதிகளில்வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மேட்டூர் வட்டாட்சியர் நேரில் சென்று எச்சரித்துள்ளார்.