இந்திய இரு இலக்கில் வளர்ச்சி காண என்ன காரணம்.. கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன?

இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதமானது முதல் காலாண்டில் இரு இலக்கில் வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பார்ப்புகளை போலவே 13.5% ஆக வளர்ச்சி கண்டுள்ளது.

இது கடந்த காலாண்டில் வளர்ச்சி விகிதம் 4.1% ஆக இருந்த நிலையில் ஜூன் காலாண்டில் இரு இலக்கில் வளர்ச்சி கண்டுள்ளது.

இந்திய பொருளாதாரம் சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியிலும், நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளது. சர்வதேச நாடுகளின் வளர்ச்சி விகிதமானது முடங்கியுள்ள நிலையில், இந்தியாவின் வளர்ச்சிக்கு என்ன காரணம்? வாருங்கள் பார்க்கலாம்.

கணிப்பு எட்டப்படவில்லை

ஜிடிபி விகிதம் இரு இலக்கில் வளர்ச்சி கண்டிருந்தாலும், ரிசர்வ் வங்கியின் கணிப்பு விகிதமான 16.2% விகிதத்தினை எட்டவில்லை. எப்படியிருப்பினும் இது இந்தியாவின் இரண்டாவது பெரிய வளர்ச்சி விகிதமாகும். கடந்த ஜூன் 2021 காலாண்டில் 20.1% ஆக இருந்த வளர்ச்சி விகிதமானது, அதன் பிறகு ஒற்றை இலக்கத்திலேயே வளர்ச்சி கண்டு வந்தது.

வளர்ச்சி விகிதம்?

வளர்ச்சி விகிதம்?

ஜூன் காலாண்டில் ரியல் ஜிடிபி விகிதம் 13.5% ஆகவும், நாமினல் ஜிடிப விகிதம் 26.7% ஆகவும், ரியல் ஜிவிஏ 12.7% ஆகவும் வளர்ச்சி கண்டுள்ளது. இதே முக்கிய துறைகளின் வளர்ச்சி விகிதமானது நல்ல ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக விவசாயத் துறை 4.5% வளர்ச்சி கண்டும், கட்டமைப்பு 16.8%மும், வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து துறையில் 25.75மும், பொது நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் மற்ற துறைகளில் 26.3%மும், மின்சாரம், கேஸ், மற்றும் பயனபாட்டு துறைகளும் 14.7%மும் வளர்ச்சி கண்டுள்ளன. இதே உற்பத்தி துறையில் 4.8%மும், சுரங்கம் 6.5%மும் வளர்ச்சி கண்டுள்ளது. இதில் மேற்கண்ட துறைகள் மொத்தமும் 8% வளர்ச்சியினை கடந்த காலாண்டில் தாண்டவில்லை என்பதோடு, உற்பத்தி துறையில் சரிவினையே கண்டிருந்தது.

கவனிக்க வேண்டிய காரணிகள்
 

கவனிக்க வேண்டிய காரணிகள்

இந்திய பொருளாதாரம் இந்த அளவுக்கு வளர்ச்சி விகிதத்தினை எட்ட முக்கிய காரணிகளில் ஒன்று தனியார் நுகர்வு அதிகரிப்பு என்றும் கூறப்படுகிறது. சர்வதேச அளவில் நிலவி வந்த மந்த நிலைக்கு மத்தியிலும், இங்கு பணவீக்கத்தினை கட்டுப்படுத்த அரசு எடுத்த பல முயற்சிகளும் வளர்ச்சிக்கு வழிவகுத்தன.

தாக்கம் இருக்கலாம்

தாக்கம் இருக்கலாம்

சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், உலகளாவிய நிதிச் சந்தைகள், பணவீக்கம், சப்ளை சங்கிலியில் தாக்கம் என பலவும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. இது வரும் காலாண்டுகளில் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India’s Q1 FY23 GDP growth surges to 13.5%, misses estimates

India’s Q1 FY23 GDP growth surges to 13.5%, misses estimates/இந்திய இரு இலக்கில் வளர்ச்சி காண என்ன காரணம்.. கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.