பெண்களின் முக்கிய பிரச்சனைக்கு தீர்வு.. டெல்லியில் இன்று தடுப்பூசி அறிமுகம்!

இந்திய அளவில் 15 முதல் 44 வயது பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் முதலிடம் வகிப்பது கருப்பை வாய் புற்றுநோய். ஹூயூமன் பாப்பிலோமா வைரஸ் மூலம் ஏற்படும் இந்த தொற்று பெண்களின் உயிருக்கே ஆபத்தாக அமைகிறது.

இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் சருமத்தின் மூலமான தொடுதல் சுகாதாரமற்ற உடலுறவு, புகைப் பிடித்தல், கர்ப்பத்தடை மாத்திரைகளை அதிக காலம் பயன்படுத்துதல் ஆகியவை இந்த வகை வைரஸ் தொற்றுக்கு ஆளாவதற்கு முக்கிய காரணாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதற்கான சிகிச்சை முறைக்கு அதிக அளவில் பணம் தேவைப்படுவதால் ஏழை, எளிய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், கருப்பை வாய் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பாற்றலை அளிக்கும் சொ்வாவாக்(Cervavac vaccine) தடுப்பூசியை சீரம் இந்தியா(Serum Institute of India) நிறுவனம் தயாரித்துள்ளது. இது கருப்பை வாய் புற்றுநோய்க்கு முக்கியக் காரணியான ஹியூமன் பாப்பிலோமா வைரஸுக்கு எதிராக செயல்படுகிறது.

பிரதமர் மோடியின் சாப்பாட்டு செலவு விபரம் ..! – தகவல் அறியும் உரிமை சட்டம் அளித்த பகீர் தகவல்..!

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பயோ தொழில்நுட்ப துறையின் உதவியுடன் மேற்கொண்ட தடுப்பூசியின் 2 மற்றும் 3-ம் கட்ட சோதனைகள் நிறைவடைந்தன. அதனைத் தொடர்ந்து தடுப்பூசியை சந்தைப்படுத்துதல் அங்கீகாரம் சீரம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங்(Jitendra Singh) இன்று டெல்லியில் தடுப்பூசியை அறிமுகம் செய்யவுள்ளாா். இந்நிகழ்ச்சியில் சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதாா் பூனாவாலா உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.