கல்லிலே கலை வண்ணம் கண்டார்’ என்பதாக தினுசு தினுசாக மொபைலில் என்ன செய்ய முடியும் என யோசித்துக் கொண்டிருக்கிறது தென் கொரிய நிறுவனமான சாம்சங். மிட்பட்ஜெட் செக்மென்ட்டை மொத்தமாய் சீன நிறுவனங்கள் பிடித்துக் கொள்ள, இனி மார்க்கெட்டில் மீண்டும் காலூன்ற வேண்டுமென்றால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறது.
வெறுமனே ரேமை அதிகப்படுத்துவது, கேமராக்களை மூன்று, நான்கு, ஐந்து என ரயில் கம்பார்ட்மென்டுகளைப்போல ஏற்றிக்கொண்டே செல்வது மட்டும் விற்பனைக்கு உதவாது என்பதை அறிந்தே இருக்கிறது இந்த ஆதாம் – ஏவாள் காலத்து நிறுவனம்.
அவர்களுடைய `Galaxy Unpacked 2022’ ஈவென்ட்டில், சாம்சங் வெளியிட்டது எல்லாமே வேறு லெவல் மாடல்கள்தான். prebook செய்து பரிசுகளை அள்ளுங்கள் என்கிறது. என்ன, கேட்ஜெட்கள் ஒவ்வொன்றும்தான் பைக் விலை, கார் விலையாக இருக்கிறது.