தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அந்தப் படத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டாவுக்கு ரசிகர்கள் பெருகினர். மேலும், சமூக வலைதளங்களில் பல பெண்களின் க்ரஷ்ஷாகவும் மாறினார் அவர். அர்ஜுன் ரெட்டி படத்துக்கு பிறகு கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் என்று பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். தமிழில் இவர் நடிப்பில் வெளியான நோட்டா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்தச் சூழலில், பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் இவர் நடித்திருந்த லைகர் படம் சமீபத்தில் வெளியானது. இதில் குத்துச்சண்டை வீரராக விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார். மேலும், உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரரான் மைக் டைசனும் நடித்திருந்தார்.
இவர்களுடன், அனன்யா பாண்டே, சார்மி,ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான இப்படம் படுதோல்வியடைந்துள்ளது. மேலும் படத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துவருகிண்றனர்.
So, Karan Johar’s #Liger has become one of the biggest disasters at the BO. The losses are so huge, it may push various distributors to bankruptcy.
Situation is so miserable that it won’t even recover daily PR costs! Fake apology PR plugged stories are costlier than daily
— Eray Mridula Cather (@ErayCr) August 30, 2022
இந்நிலையில், இப்படத்தின் தோல்வி குறித்து நடிகை சார்மி பேசுகயில், “ரசிகர்கள் வீட்டில் இருந்தவாறே நல்ல கதைகள் கொண்ட படங்களையும் பெரிய பட்ஜெட் படங்களையும் ஒரே க்ளிக்கில் பார்க்கும் நிலை தற்போது இருக்கிறது. அவர்களை உற்சாகப்படுத்தும்படி படங்கள் வெளியானால்தான் அவர்கள் திரையரங்குக்கு வருவார்கள்.
தெலுங்கில் வெளியான ‘பிம்பிசாரா’, ‘சீதா ராமம்’, ‘கார்த்திகேயா 2’ படங்கள் ரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றன. இந்தப் படங்கள் ரூ.150 கோடியில் இருந்து ரூ.175 கோடி வரை வசூலித்துள்ளன. தென்னிந்தியாவில் முன்பை போல இப்போதும் சினிமா மோகம் இருப்பதாகத் தெரியவில்லை. கொரோனாவால் இந்தப் படத்தை உருவாக்க 3 வருடம் ஆகிவிட்டது. பல கஷ்டங்களுக்குப் பிறகே படத்தைத் தயாரித்தோம். ஆனால் அதன் ரிசல்ட் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது” என்றார்.