பெங்களூரு:
தென்னிந்திய
திரையுலகில்
ரொம்பவே
பிரபலமானவர்
நடிகை
ரம்யா.
முன்னணி
நடிகையாக
வலம்
வந்த
ரம்யா,
அரசியலிலும்
காங்கிரஸ்
எம்பியாக
பெரிய
ரவுண்டு
வந்தார்.
இந்நிலையில்,
நடிகை
ரம்யா
மீண்டும்
திரைத்துறையில்
அடியெடுத்து
வைக்கவுள்ளதாகத்
தெரிவித்துள்ளார்.
கன்னடத்தில்
அறிமுகம்
மறைந்த
கன்னட
சூப்பர்
ஸ்டார்
புனித்
ராஜ்குமாரின்
‘அபி’
படத்தின்
மூலம்
நாயகியாக
அறிமுகமானவர்
ரம்யா.
தொடர்ந்து
கன்னடத்தில்
ஆகாஷ்,
கௌரம்மா,
ஜோதே
ஜோதியாளி
என
அடுத்தடுத்து
பல
படங்களில்
நடித்து
பிரபலமானார்.
கன்னடத்தில்
இருந்து
தமிழுக்கும்
அறிமுகமான
ரம்யாவின்
முதல்
படமாக
‘குத்து’
அமைந்தது.
இந்தப்
படத்தில்
சிம்புவின்
ஜோடியாக
க்ளாமரில்
கலக்கியிருப்பார்
ரம்யா.
அதனால்
குத்து
ரம்யா
என்றே
அழைக்கப்பட்டார்.
தமிழில்
கலக்கிய
ரம்யா
‘குத்து’
படத்தின்
மூலம்
கோலிவுட்டில்
அறிமுகமான
ரம்யாவுக்கு
தொடர்ந்து
தமிழில்
நிறைய
படங்களில்
வாய்ப்புகள்
தேடிச்
சென்றன.
அர்ஜுனுடன்
கிரி,
தனுஷுடன்
பொல்லாதவன்,
சூர்யாவுடன்
வாரணம்
ஆயிரம்
என
கோலிவுட்டிலும்
முன்னணி
நடிகையாக
ஒரு
ரவுண்டு
வந்தார்.
திவ்யா
ஸ்பந்தனா,
ரம்யா,
குத்து
ரம்யா
என
இவருக்கு
பல
அடையாளங்கள்
இருந்தன.
நடிகையாக
மட்டும்
இருந்துவிடாமல்
அரசியலிலும்
களமிறங்கினார்
ரம்யா.
மாண்டியா
எம்பியாக
என்ட்ரி
சினிமாவில்
பிஸியாக
இருக்கும்
போதே
2012ல்
காங்கிரஸ்
கட்சியில்
இணைந்தார்.
சினிமாவில்
க்ளாமரில்
அதிரடி
காட்டியதைப்
போல
அரசியலிலும்
பல
அதிரடிகளை
அரங்கேற்றினார்.
அதனால்,
2013ல்
மாண்டியா
மக்களவை
தொகுதியில்
நடைபெற்ற
இடைத்
தேர்தலில்
போட்டியிட்டு
எம்பி
ஆனார்.
ஆனாலும்,
அடுத்தாண்டு
நடைபெற்ற
பொதுத்
தேர்தலில்
போட்டியிட்டு
தோல்வியைத்
தழுவினார்.
6
ஆண்டுகளுக்குப்
பின்னர்
சினிமாவில்
2014
தேர்தலில்
தோல்வியடைந்ததும்
ரம்யாவுக்கு
அரசியலில்
ஆர்வம்
குறைந்தது.
இதனால்
சில
வருடங்களாக
சினிமா,
அரசியலில்
இருந்து
ஒதுங்கியே
இருந்தார்.
இந்நிலையில்,
6
ஆண்டுகளுக்குப்
பிறகு
மீண்டும்
சினிமாவில்
அறிமுகமாகிறார்
ரம்யா.
தனது
‘ஆப்பிள்
பாக்ஸ்’
என்ற
தயாரிப்பு
நிறுவனம்
மூலம்
2
படங்களைத்
தயாரித்து
வருகிறார்.
மேலும்,
ஓடிடி
தளங்களுக்காக
வெப்
சீரிஸ்களையும்
தயாரிக்க
உள்ளாராம்.
அதோடு
நடிகையாக
ரீ-என்ட்ரி
கொடுக்கவுள்ளதாகவும்
கூறப்படுகிறது.