இந்திய பொருளாதாரம் ஜூன் காலாண்டில் 13.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்திருந்தாலும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 20.1 சதவீத வளர்ச்சி மட்டுமே அடைந்துள்ளது.
உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் ஐரோப்பா பொருளாதாரம் மோசமாக இருக்கும் வேளையில் இந்தியா 2 இலக்கு வளர்ச்சி அடைந்துள்ளது தரமான சம்பவமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டை காட்டிலும் மோசமான குறைவான சரிவை அடைய முக்கியக் காரணம் விலைவாசி உயர்வு தான்.
இந்த நிலையில் செப்டம்பர் மாத முதல் நாளிலேயே நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவது மட்டும் அல்லாமல் நாட்டின் பொருளாதாரத்திற்கும் சாதகமான சூழ்நிலை உருவாக்கியுள்ளது.
சாமானியர்களை தவிக்க வைக்கும் தக்காளி விலை! ஒரு கிலோ விலை என்ன தெரியுமா?
விலைவாசி உயர்வு
இந்தியாவில் விலைவாசி உயர்வு காரணமாக அதிகம் பாதிக்கப்படுவது நுகர்வோர் அதிலும் குறிப்பாகச் சாமானிய மக்கள் தான். மக்கள் தினமும் வாங்கும் காய்கறி, பழங்கள், உணவுப் பொருட்கள் விலை பெரிய அளவில் உயர்ந்த நிலையில் நுகர்வோர் சந்தை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி
இந்த நிலையில் செப்டம்பர் மாதத்தின் முதல் நாளில் இந்திய மக்களின் உணவில் முக்கியப் பங்கு வகிக்கும் உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி-யின் விலை தடாலடியாக இன்று குறைந்துள்ளது. இன்று காலை வர்த்தகச் சந்தையில் உருளைக்கிழங்கு விலை 30 சதவீதமும், தக்காளி விலை 20 சதவீதமும் குறைந்துள்ளது.
காரணம்
உருளைக்கிழங்கு வியாபாரிகள் விலை உயரும் என அதிகளவிலான கிழங்குகளைத் தேக்கி வைத்திருந்தனர், ஆனால் விலை உயராத காரணத்தால் தற்போது மொத்தமாக வெளியேற்றியுள்ளனர். இதேபோல் தக்காளி விளைச்சல் அதிகமாக இருப்பதால் சந்தையில் அதன் வரத்து அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக இரண்டின் விலையும் பெரிய அளவில் குறைந்துள்ளது.
ஆந்திர பிரதேசம்
இந்நிலையில் ஆந்திராவில் இருக்கும் தக்காளி பல்ப் துறை நிறுவனங்களை அதிகத் தக்காளியை வாங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதன் மூலம் அதிகப்படியான விலை விவசாயிகளுக்குக் கிடைக்கும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
உருளைக்கிழங்கு விலை
நேற்று மொத்த விலை சந்தையில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு விலை 20 ரூபாயாக இருந்தது தற்போது 14-16 ரூபாய்க்கு குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக உருளைக்கிழங்கு விவை தொடர்ந்து நிலைப்பெற்று இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது சாமானிய மக்களுக்கு நிதி செலவுகள் அடிப்படையில் சில தளர்வுகள் கிடைத்துள்ளது.
Potato and tomato prices fallen up to 30 percent in the last fortnight
Potato and tomato prices fall up to 30 percent மாதத்தில் முதல் நாளே குட்நியூஸ்.. மக்கள் நம்மதி..!