அவர்களை குற்றம் சொல்லவேமுடியாது… பிரித்தானியாவில் உயிரிழந்த கேரள மாணவர்களுக்கு நண்பர்கள் புகழாரம்


கேரள பின்னணி கொண்ட மாணவர்கள் இருவர் பிரித்தானியாவில் ஏரி ஒன்றில் மூழ்கி உயிரிழந்தார்கள்.

அவர்களை எந்த குற்றமும் சொல்லமுடியாது, அவ்வளவு நல்லவர்கள் என மனமாரப் புகழ்கிறார்கள் நண்பர்கள்.

வட அயர்லாந்தில் ஏரி ஒன்றில் மூழ்கி உயிரிழந்த இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவரைக் குறித்து அறிந்த அனைவருமே அவர்களை மனமாரப் புகழ்கிறார்கள்.

வட அயர்லாந்திலுள்ள Derry என்ற இடத்தில் வாழும் சில மாணவர்கள், திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில், Enagh Lough என்ற ஏரியில் நீந்தச் சென்றபோது அவர்களில் Reuven Simon மற்றும் Joseph Sebastian என்னும் இரண்டு பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்கள்.

அவர்கள் இருவருக்கும் நாளை உள்ளூர் நேரப்படி 11.00 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

இந்நிலையில், அவர்களை அறிந்த அனைவருமே அவர்களை அப்படிப் புகழ்கிறார்கள். குறிப்பாக, அவர்களுடைய நண்பர்கள்…

Reuven மற்றும் Joseph இருவருமே அவ்வளவு நல்ல பையன்கள், அவர்களை எந்த குற்றமுமே சொல்லமுடியாது, ஒழுக்கமான, மரியாதையான, சுயநலமற்ற அவர்கள், எப்போதுமே மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முயற்சிப்பார்கள் என்கிறார் அவர்களுடைய தோழியான Priya Biji.

அவர்களை குற்றம் சொல்லவேமுடியாது... பிரித்தானியாவில் உயிரிழந்த கேரள மாணவர்களுக்கு நண்பர்கள் புகழாரம் | Can T Blame Them At All

ALAMY

இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை, எல்லோருமே ஆடிப்போயிருக்கிறார்கள் என்கிறார் அவர்களுடைய நண்பர்களில் ஒருவரான Joseph Joy.

அவர்களுடைய குடும்ப நண்பரான Jossy Aji, அவர்கள் சிறுபிள்ளைகளாக இருந்ததிலிருந்து அவர்கள் வளர்வதைப் பார்த்தவள் நான், அவர்களும் என் மகனைப்போலத்தான், எனக்குத் தெரிந்ததிலேயே அவ்வளவு இனிமையானவர்கள் அவர்கள் என்கிறார்.

இந்நிலையில், Reuven மற்றும் Joseph இருவருமே கடந்த வாரம்தான் தங்கள் GCSE தேர்வுகளில் வெற்றி பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

அவர்களை குற்றம் சொல்லவேமுடியாது... பிரித்தானியாவில் உயிரிழந்த கேரள மாணவர்களுக்கு நண்பர்கள் புகழாரம் | Can T Blame Them At All

அவர்களை குற்றம் சொல்லவேமுடியாது... பிரித்தானியாவில் உயிரிழந்த கேரள மாணவர்களுக்கு நண்பர்கள் புகழாரம் | Can T Blame Them At All



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.