வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.96 குறைந்துள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணை விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயித்து வருகிறது.
இந்த நிலையில், வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.96.00 குறைந்துள்ளது. இதனால் அதன் விலை ரூ.2,141ல் இருந்து ரூ.2,045-க்கு விற்கப்படுகிறது. கடந்த மே 19ம் தேதிக்கு பின்னர் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 5வது குறையாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.