காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியா காந்தி மற்றும் ஜிதேந்திர பிரசாத் இடையேயான போட்டியின் போது, 2000 ஆம் ஆண்டு, தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை சர்ச்சைக்குரியதாக மாறியது. இப்போது மீண்டும் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, தேர்வாளர் குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று குறைந்தது 3 கட்சித் தலைவர்கள் புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2000ம் ஆண்டு, காங்கிரஸ் பதவிக்கு தேர்தல் நடந்தபோது, பிரசாத் முகாம் தேர்தல் நடைமுறையின் நியாயத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னும் பின்னும், பிரதேச காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள்- தேர்தல் உறுப்பினர்கள் – பட்டியலில், கையாடல் மற்றும் முறைகேடுகள் நடந்ததாக அது குற்றம்சாட்டியது.
தேர்வாளர் குழுவில் போலி பெயர்கள் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். பிரசாத முகாம், அவருக்கு பிரதிநிதிகளின் முகவரிகள் வழங்கப்படவில்லை என்று கூறியது, இது மார்ஷல் ஆதரவிற்கான அவரது முயற்சிகளுக்கு இடையூறாக இருந்தது.
இதுதொடர்பாக பிரசாத், காங்கிரஸ் பிரதிநிதிகளின் பட்டியலை வெளியிடத் தவறியது குறித்து கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத்திற்கு (CEA) கடிதம் எழுதியிருந்தார்.
இப்போது அதே குற்றச்சாட்டுகள் மீண்டும் கட்சியை வேட்டையாடத் திரும்பியுள்ளன.
மக்களவை எம்.பி.யும், ஜி-23 உறுப்பினருமான மணீஷ் திவாரி புதன்கிழமை, “பொதுவில் கிடைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் பட்டியல் இல்லாமல் எப்படி நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடத்த முடியும்” என்று கேட்டார். உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள், கட்சி இணையதளத்தில் வெளிப்படைத் தன்மையுடன் வெளியிடப்பட வேண்டும், – இது நியாயமான மற்றும் சுதந்திரமான செயல்முறையின் சாராம்சமாக இருக்கும் என்று அவர் கூறினார்.
அவரது ஜி-23 சகாவான ஆனந்த் சர்மா, தேர்தல் அட்டவணைக்கு ஒப்புதல் அளித்த காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் இதே பிரச்சினையை எழுப்பிய மூன்று நாட்களுக்குப் பிறகு அவரது கருத்துக்கள் வந்துள்ளன. சுமார் 9,000 பிரதேச காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் குறித்து தெளிவு இல்லை என்று சர்மா வாதிட்டார்.
செவ்வாய்க்கிழமை தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு பேட்டியளித்த, கட்சியின் தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி, இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி உறுப்பினர்கள் பட்டியலை பொது களத்தில் வைக்க முடியாது என்று கூறினார். இந்த பட்டியல், பிரதேச காங்கிரஸ் கமிட்டியிடம் உள்ளது. இதை பார்க்க விரும்புவோர்- வேட்புமனு தாக்கல் செய்ய விரும்புவோர்- பிரதேச காங்கிரஸ் கமிட்டியை தொடர்பு கொள்ளலாம். இது பொது மக்களுக்கானது அல்ல. இது ஒரு நிறுவனத் தேர்தல், எங்கள் உறுப்பினர்கள் அதை நடத்தலாம். அது எங்களின் சொத்து” என்று கூறியிருந்தார்.
28 பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் மற்றும் எட்டு பிராந்திய காங்கிரஸ் கமிட்டிகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை என்பதை சுட்டிக்காட்டிய திவாரி, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் யார் என்பதைக் கண்டறி, நாட்டில் உள்ள ஒவ்வொரு பி.சி.சி அலுவலகத்திற்கும் ஒருவர் ஏன் செல்ல வேண்டும்? இது ஒரு கிளப் தேர்தலில் கூட நடக்காது. எனவே நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையைக் கருத்தில் கொண்டு, முழு தேர்வுக்குழு பட்டியலையும் காங்கிரஸ் இணையதளத்தில் வெளியிடுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தேர்வாளர் யார் என்று தெரியாவிட்டால், ஒருவர் போட்டியிடுவதை எப்படிக் கருத்தில் கொள்ள முடியும்.
ஒருவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும் மற்றும் 10 காங்கிரஸ்காரர்களால் முன்மொழியப்பட்டால், தேவையின்படி, அவர்கள் செல்லுபடியாகும் வாக்காளர்கள் இல்லை என்று கட்சியின் தேர்தல் ஆணையம் அதை நிராகரிக்கலாம்.
திவாரி, சக மக்களவை எம்பி கார்த்தி சிதம்பரத்திடம் இருந்து ஆதரவைப் பெற்றார், அவர் “ஒவ்வொரு தேர்தலுக்கும் நன்கு வரையறுக்கப்பட்ட மற்றும் தெளிவான தேர்வுக்குழு பட்டியல் தேவை” என்று கூறினார். மேலும் கார்த்தி கூறுகையில், “தேர்வுக்குழு பட்டியல் உருவாக்கும் செயல்முறை தெளிவாகவும், நன்கு வரையறுக்கப்பட்டதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும். ஒரு தற்காலிகமாக இருக்கக் கூடாது.
“சீர்திருத்தவாதிகள் கிளர்ச்சியாளர்கள் அல்ல” என்றும் கார்த்தி கூறினார்.
எந்தவொரு தேர்தலும் நியாயமாக இருக்க, தேர்வுக்குழு பட்டியல் அரசியலமைப்பு ரீதியாக அமைக்கப்பட வேண்டும், என்று திவாரி கூறினார். காங்கிரஸ் செயற்குழுவில் பரவலாகப் பகிரப்பட்ட இந்த கவலையை ஆனந்த் சர்மா வெளிப்படுத்தியதாக நான் செய்தித்தாள்களில் படித்தேன்.
சில மணிநேரங்களுக்குப் பிறகு, மற்றொரு G-23 உறுப்பினரான சசி தரூர், (தேர்தலில் போட்டியிடுவது குறித்து தீவிரமாகப் பரிசீலிப்பதாகக் கூறப்படுகிறது) திவாரியுடன் உடன்பட்டார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் அனைவரும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கிறேன். மனீஷ் அதைத்தான் கேட்டிருக்கிறார் என்றால், எல்லோரும் ஒப்புக்கொள்ளும் கொள்கை இது என்று நான் உறுதியாக நம்புகிறேன். யாரை முன்னிறுத்தலாம், யார் வாக்களிக்கலாம் என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். அதில் தவறேதும் இல்லை” என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து ராஜினாமா செய்த சில நாட்களுக்குப் பிறகு தேர்வுக்குழு பட்டியல் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போதிருந்து, அவர் அமைப்புத் தேர்தலை “கேலிக்கூத்து” என்று அழைத்தார், டெல்லியில் அமர்ந்திருக்கும் சில தலைவர்களால் தேர்வுக்குழு பட்டியல் தயாரிக்கப்பட்டது என்று வாதிட்டார். ஆசாத் தனது ராஜினாமா கடிதத்தில், காங்கிரஸின் நிலைமை திரும்ப முடியாத நிலையை எட்டியுள்ளது என்றும், கட்சித் தலைமையை கைப்பற்ற பினாமிகள் இப்போது முட்டுக்கட்டை போடப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் ஒரு “பொம்மையாக” இருப்பார் என்று அவர் வாதிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“