பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு மைக்ரோசாப்ட்-இல் வேலை.. சம்பளம் இத்தனை லட்சமா?

பார்வையற்ற மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் வேலை அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த இளைஞருக்கு ரூபாய் 47 லட்சம் ஆண்டு சம்பளத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்து உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிறு வயதிலேயே கண் பார்வை இழந்த இந்த இளைஞர் தனது விடா முயற்சியின் மூலம் என்ஜினியரிங் படிப்பு படித்து தற்போது தனது கனவு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட் பால் ஆலன் கலைப்பொருட்கள் ஏலம்.. மதிப்பு இவ்வளவு பில்லியனா?

சாப்ட்வேர் இன்ஜினியர்

சாப்ட்வேர் இன்ஜினியர்

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 25 வயது சாப்ட்வேர் இன்ஜினியர் யாஷ் சோனகியா கடந்த 2021ஆம் ஆண்டு பி டெக் பட்டத்தை இந்தூரை தளமாகக் கொண்ட ஸ்ரீ கோவிந்திரம் செக்சாரியா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனத்தில் முடித்தார். இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ரூபாய் 47 லட்சம் ஆண்டு சம்பளத்தில் வேலை பெற்றுள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கிளௌகோமா நோய்

கிளௌகோமா நோய்

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் கேன்டின் நடத்து வரும் யாஷ் சோனகியாவின் தந்தை யாஷ்பால், தனது மகனுக்கு கிளௌகோமா என்ற நோய் இருப்பதை கண்டறிந்தார். அதன்பின் அதற்கு அவர் சிகிச்சை அளித்தும் யாஷின் கண் பார்வை பறிபோய் விட்டது.

சகோதரியின் உதவி
 

சகோதரியின் உதவி

தனது மகன் எட்டு வயதிலேயே கண் பார்வை இழந்ததால் பெரும் வருத்தத்திற்கு உள்ளான தந்தை யாஷ்பால், தனது மகனின் மென்பொருள் இன்ஜினியர் படிப்பு படிக்க வேண்டும் என்ற கனவுக்கு ஒத்துழைத்தார். ஐந்தாம் வகுப்பு வரை சிறப்பு தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான பள்ளியில் படித்த யாஷ், அதன்பின் வழக்கமான பள்ளியில் சேர்ந்தார் என்பதும் அவருக்கு அவருடைய சகோதரி கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை படிக்க உதவியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நனவாகிய கனவு

நனவாகிய கனவு

எனது மகன் யாஷ் சோனகியா மென்பொருள் இன்ஜினியராக வேண்டும் என்று கனவு கண்டார். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தற்போது அவரது கனவு நனவாகி உள்ளது என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

ரூ.47 லட்சம் சம்பளம்

ரூ.47 லட்சம் சம்பளம்

இந்த நிலையில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பை முடித்த யாஷ் சோனகியா, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பம் செய்திருந்தார். ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணலை முடித்தபின் அவர், தற்போது சாப்ட்வேர் இன்ஜினியர் பதவிக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தினரால் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் அவருக்கு ஆண்டுக்கு 47 லட்ச ரூபாய் சம்பளம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு அலுவலகத்தில் வேலை

பெங்களூரு அலுவலகத்தில் வேலை

தற்போது அவர் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொள்ளப் பட்டதாகவும், ஆனால் விரைவில் அவர் பெங்களூர் அலுவலகத்தில் மென்பொருள் பொறியாளராக சேரப் போவதாகவும் பிடிஐ செய்தியாளர்களிடம் யாஷ் சோனகியா தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Microsoft offers Rs 47 lakh salary package to visually impaired software engineer from Madhya Pradesh

Microsoft offers Rs 47 lakh salary package to visually impaired software engineer from Madhya Pradesh | பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு மைக்ரோசாப்ட்-இல் வேலை.. சம்பளம் இத்தனை லட்சமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.